கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீர் மேலாண்மை: அரசுக்கு ஐகோர்ட் குட்டு

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (47)
Advertisement

சென்னை: தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.





தமிழகத்தில் நீர் மேலான்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தண்ணீர் பிரச்னை குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கண்டனம். ஏரிகளை துார் வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த நடவடிக்கை என்ன?. இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
மழை நீர் கடலில் வீணாக கடலில் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. நீர் வற்றுவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வால் என்ன பலன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய ஐகோர்ட் நீதிபதிகள், அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.




நீர்மேலாண்மை குறித்த அரசாணைகளை சமர்ப்பிக்க வேண்டும். சென்னைக்கு குடிநீர் வழங்கியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். தண்ணீர் பிரச்னை குறித்து எடுக்கப்பட்ட நவவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அரசு சார்பில், 'கடல் நீரை குடிநீராக்கும் 3வது யூனிட் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும், அது வந்தால் சென்னையின் குடிநீர் பிரச்னை தீரும் என்றும், தமிழகத்தில் குடிநீர் வழங்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னதாக பதிலளிக்கப்பட்டது, அதன் பின்னரே நீதிபதிகள் அரசை நோக்கி சரமாரியான கேள்விகளை தொடுத்து கண்டித்தனர்.


Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Kirubakaran - Doha,கத்தார்
18-ஜூன்-201922:27:20 IST Report Abuse
G.Kirubakaran இந்தியாவிலே மிக மோசமான நீர் நிர்வாகம் ,தமிழ்நாடு .பொதுமக்களின் துயரம் கொஞ்சம் கூட தெரியாது. அமைச்சர்களின் அறிக்கை அதை விட மோசம் . சுருக்கமாக சொன்னால் அணைத்து ஏறி,குளம் தூர் வாரினால் போதும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஜூன்-201921:20:04 IST Report Abuse
தமிழ்வேல் எங்களுக்கா அறிக்கை தயார் பண்ண தெரியாது? மிஞ்சி, மிஞ்சி போனால் இன்னொரு குட்டு விழப்போகுது. /// நீர்மேலாண்மை குறித்த அரசாணைகளை சமர்ப்பிக்க வேண்டும். சென்னைக்கு குடிநீர் வழங்கியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். தண்ணீர் பிரச்னை குறித்து எடுக்கப்பட்ட நவவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். ///
Rate this:
Share this comment
Cancel
K.P SARATHI - chennai,இந்தியா
18-ஜூன்-201920:07:42 IST Report Abuse
K.P  SARATHI காவேரியில் 3 லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் கலந்தது அதை சேமித்த இருத்தால் இந்த நிலை கிடையாது அப்போது நீதிமன்றம், மீடியா, மற்றும் எந்த கட்சியும் இதை கண்டுகொள்ளவில்லை. நீதி மன்றங்கள் செய்தியை படிக்கலாமல் பொது நல வழக்கு தொடர்ந்தால் மட்டும் நடவடிக்கை இது தவறு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X