மீனவர்கள் 2 வது நாளாக ஸ்டிரைக்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீனவர்கள் 2 வது நாளாக ஸ்டிரைக்

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (1)
மீனவர்கள் ஸ்டிரைக், 2வது நாள், ராமேஸ்வரம், மீன்களுக்கு உரிய விலை, சிண்டிகேட்

ராமேஸ்வரம்: மீன்களுக்கு உரிய விலை கோரி, 2வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏற்றுமதி வகையான இறால், நண்டு மற்றும் கணவாய் மீன்களை கரைக்கு கொண்டு வருகின்றனர். இவ்வகை மீன்களை தனியார் ஏற்றுமதி வியாபாரிகள் கூட்டாக சிண்டிகேட் அமைத்து கிலோ 150 முதல் 200 ரூபாய் வரை விலை பேசி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் மீனவர்கள், மீன்களுக்கு உரிய விலை வழங்க கோரியும், தனியார் ஐஸ் கட்டி நிறுவனங்கள், நியாயமான விலைக்கு ஐஸ்கட்டிகளை விற்க வலியுறுத்தியும் 2வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சுமார் ஒன்றரை லட்சம் மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளதாகவும், சுமார் 10 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X