2030 முதல் மின்னணு கார்கள் மட்டும் விற்பனை| Niti's new road map: Only electric vehicles to be sold after 2030 | Dinamalar

பொது செய்தி

இந்தியா

2030 முதல் மின்னணு கார்கள் மட்டும் விற்பனை

Added : ஜூன் 18, 2019
Share
புதுடில்லி: 2030க்கு பிறகு மின்னணு வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும், இதற்கான திட்டங்களை உருவாக்க பல்வேறு அமைச்சகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிடி ஆயோக் அமைப்பு, அமைச்சரவைக்கு பரிந்துரை செய்துள்ளது.மேலும், இந்த பரிந்துரையில், 2030க்குள் டீசல் மற்றும் பெட்ரோலால் இயங்கும் வாகனங்கள் விற்பனையை தடை செய்வதற்கான கொள்கைகளை மத்தியடி மத்திய சாலை
நிடி ஆயோக், மின்னணு கார்கள்,

புதுடில்லி: 2030க்கு பிறகு மின்னணு வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும், இதற்கான திட்டங்களை உருவாக்க பல்வேறு அமைச்சகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிடி ஆயோக் அமைப்பு, அமைச்சரவைக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேலும், இந்த பரிந்துரையில், 2030க்குள் டீசல் மற்றும் பெட்ரோலால் இயங்கும் வாகனங்கள் விற்பனையை தடை செய்வதற்கான கொள்கைகளை மத்தியடி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் உருவாக்க வேண்டும். இது குறித்து அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும். மத்திய அரசு, அமைப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசலில் இங்கும் கார்களை, மின்சாரத்தில் இயங்கும் கார்களாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 2030க்குள் 50 ஜிகாவாட் ஹவர் பேட்டரிகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil newsமின்னணு வாகனங்கள் விற்பனை மூலம், எரிபொருள் இறக்குமதிக்கு ஆகும் செலவில் ரூ.3 லட்சம் கோடி அரசுக்கு மிச்சமாகும். இந்த வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பு மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். என நிடி ஆயோக் அமைப்பு கணித்துள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்க, முதலாண்டில் வரிச்சலுகை அளிக்கலாம் எனவும் கூறியுள்ளது.


latest tamil news
இதற்கு முன்பு, மின்னணு வாகனங்கள் உற்பத்தியில் ஜப்பான் மற்றும் தென் கொரியா, முன்னணியில் உள்ளதால், இந்தியாவில் மின்னணு வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அப்போது, 2030க்குள் மின்னணு வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் கட்காரி கூறியிருந்தார். தற்போது, இந்த திட்டம் குறித்து அனைவருடனும் ஆலோசனை நடத்தப்படும் எனக்கூறியுள்ளார்.


latest tamil news
இதற்கு முன்னர் நிடி ஆயோக்கின் சிஇஓ அமிதாப் காந்த் அளித்த அறிக்கை ஒன்றில், 2025 முதல், 150சிசி இன்ஜீன் திறன் கொண்ட, மின்சாரத்தில் இயங்கும் மூன்று மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டிருந்தது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X