சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லா: மோடி தேர்வு செய்தது ஏன்?

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (7)
Advertisement
om birla,சபாநாயகர், ஓம்பிர்லா, மோடி, பிரதமர், பா.ஜ.,

புதுடில்லி: முக்கிய முடிவுகள் எடுக்கும் போது, பல முறை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பிரதமர் மோடி, 17 வது லோக்சபாவின் சபாநாயகர் பதவிக்கு, ராஜஸ்தானின் கோட்டா தொகுதியிலிருந்து தேர்வான பா.ஜ., எம்.பி., ஓம்பிர்லாவை தேர்வு செய்து மீண்டும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் பதவிக்கு அடுத்த முக்கிய பதவியான லோக்சபா சபாநாயகர் பதவிக்கு, அனுபவம் வாய்ந்தவரோ அல்லது படித்த அறிஞர்களோ வருவதை விரும்பாத மோடி, அனைத்து எம்.பி.,க்களுடன் இணைந்து செயல்படும் எளிய தலைவர், பிரச்னைகளை தீர்ப்பதில் உறுதி கொண்ட நபரே வர வேண்டும் என விரும்பியதாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.





லோக்சபாவில், 6,7 முறை தேர்வான எம்.பி.,க்கள் இருக்க, இரண்டாவது முறையாக தேர்வான பிர்லா, சபாநாயகர் பதவிக்கு வருவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இருப்பினும், பிர்லாவுக்கு சட்டசபையில் பணியாற்றிய அனுபவம் உண்டு. ராஜஸ்தான் சட்டசபைக்கு 3 முறை தேர்வாகியுள்ளார். பா.ஜ.,விற்கு பாரம்பரியமாக ஆதரவு அளிக்கும், மர்வாரி பானியா சமுதாயத்தை சேர்ந்தவர். அனைவருக்கும் உதவும் எண்ணம் கொண்ட இவர், எந்த சவாலையும் எதிர்கொள்வதில் ஆர்வமாக இருப்பார். தனக்கு அளிக்கப்பட்ட பணியை, கடினமாக முயற்சி செய்து முடிப்பார். தனக்கு முன் உள்ள எந்த சவாலையும், பதற்றம் அடையாமல், சிரித்தவாரே சமாளிக்கும் திறன் படைத்தவர் என பா.ஜ.,நிர்வாகிகள் கூறுகின்றனர். கட்சி கூட்டங்கள் நடத்துவது என்றால், சொந்த ஊரான கோட்டாவையே பிர்லா முதலில் முன்மொழிவார் எனவும் தெரிவித்தனர்.





ராஜஸ்தானில் உள்ள கோட்டா பகுதி, ஜனசங்கத்தின் அரசியலில் முக்கிய பங்கு உண்டு. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் அரசியல் பயணம் இங்கிருந்துதான் துவங்கியது. சுதந்திர இந்தியாவில் நடந்த லோக்சபா தேர்தலில், தேர்தல் முகவராக அத்வானி , கோட்டாவில் பணியாற்றினார்.


நட்டாவின் நண்பர்


பா.ஜ., செயல் தலைவராக ஜேபி நட்டா நியமிக்கப்பட்ட 12 மணி நேரத்திற்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லா அறிவிக்கப்பட்டுள்ளார். 1990 களில்,பா.ஜ.,வின் இளைஞர் அணி தேசிய தலைவராக நட்டா பணியாற்றிய போது, பிர்லா துணை தலைவராகஇருந்தார். பல ஆண்டுகள் இருவரும் இணைந்து பணியாற்றினர்.






ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராக இணைந்த பிர்லா, அரசியல் வாழ்க்கையை துவுக்கினார். மாணவர் சங்க தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பின் மாநில அளவிலும், மத்திய அளவிலும் கட்சி ரீதியில் தொடர்பு ஏற்று கொண்டார். 2003ம் ஆண்டு, முதல்முறையாக கோடாவிலிருந்து எம்எல்ஏ.,வாக பிர்லா தேர்வு செய்யப்பட்டார். அதே தொகுதியில் மேலும் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார். பின்னர், 2014 ல் கோட்டா தொகுதியிலிருந்து வெற்றி பெற்று எம்.பி., ஆனார்.


பிர்லாவை எதிர்க்க ஆளில்லை

லோக்சபாவில், ஆளும் கட்சிக்கு மெஜாரிட்டி உள்ளதால், தே.ஜ., கூட்டணி வேட்பாளரான பிர்லா, சபநாயகர் ஆவது உறுதியாகியுள்ளது. அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தினாலும், அது சம்பிரதாயத்திற்காக தான் இருக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூன்-201918:24:07 IST Report Abuse
ஆரூர் ரங் எந்த கோட்டா?
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
18-ஜூன்-201917:02:41 IST Report Abuse
vasanthan கனியாக்கவை சபாநாயகராகவும், ஆண்டிபட்டி ராசாவை துணை சபாநாயகராகவும் ஆக்கி இருந்தால் நாடு 5G யில் தன்னிறைவு பெற்று இருக்கும். கனி ராசா (தொலை) தொடர்பு காம்பினேஷன் நன்றாக இருந்து இருக்கும்
Rate this:
Share this comment
Dhavan - Thiruvarur,இந்தியா
18-ஜூன்-201917:22:39 IST Report Abuse
Dhavanதயவு செய்து இந்த 3G மற்றும் 4G யில்கிடைத்தது எவ்வளவு என்று கூறவும்??...
Rate this:
Share this comment
Krish - Bengalooru,இந்தியா
18-ஜூன்-201917:41:57 IST Report Abuse
Krishவசந்தன் அவர்களே கனி அக்காவையும் ஆண்டிபட்டி ராசாவையும் நினைத்த தாங்கள் 'நம் தமிழகத்தின் அரும்பெரும் பொக்கிஷம் நிதி சகோதரர் அவர்களை ஏன் குறிப்பிடவில்லை .இந்தமுறை ஒரு உபகிரகத்தையே தங்கிரஹத்தில் வைப்பர் .அப்பேற்பட்ட தொழில் வல்லமை படைத்தவர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X