மார்கன் 'மின்னல்' சதம்:397 ரன்கள் குவித்தது இங்கிலாந்து

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019
Advertisement

மான்செஸ்டர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து வீரர் மார்கன், 57 பந்தில் சதம் விளாசினார்.






இங்கிலாந்தில் 12 வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. மாஸ்செஸ்டரில் நடக்கும் லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன், பேட்டிங் தேர்வு செய்தார்.






இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோவ், ஜேம்ஸ் வின்ஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. 31 பந்தில் 26 ரன் எடுத்த போது வின்ஸ், தவ்லத் பந்தில் அவுட்டானார். பேர்ஸ்டோவுடன் ஜோ ரூட் இணைந்தார். இருவரும் வேகமாக ரன்கள் சேர்த்தனர்.
குல்பதீன் பந்தில் பவுண்டரி அடித்த பேர்ஸ்டோவ், இத்தொடரில் இரண்டாவது அரைசதம் எட்டினார். இவர் 90 ரன் எடுத்தார். மறுபக்கம் ஜோ ரூட் அரைசதம் எடுக்க, மின்னல் வேகத்தில் விளையாடிய மார்கன் 57 வது பந்தில் சதம் அடித்தார்.
ஜோ ரூட் 88 ரன்னுக்கு அவுட்டாக, மார்கன் 71 பந்தில் 148 ரன்கள் விளாசி வெளியேறினார். பட்லர் 2, ஸ்டோக்ஸ் 2 ரன் எடுத்தனர். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 397 ரன்கள் குவித்தது. மொயீன் அலி (31), வோக்ஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

உலக கோப்பை அரங்கில் வேகமாக சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் ஆனார் மார்கன். இவர் 57 வது பந்தில் சதம் எட்டினார்.

சர்வதேச அளவில் நான்காவது வீரர் ஆனார் மார்கன். முதல் மூன்று இடத்தில் அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் (50 பந்து, 2011, இங்கிலாந்து), ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் (51 பந்து, 2015, இலங்கை), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (52 பந்து, 2015, விண்டீஸ்) உள்ளனர்.

17ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார் இங்கிலாந்தின் மார்கன். இவர் நேற்று 17 சிக்சர் அடித்தார். இதற்கு முன் ரோகித் சர்மா (இந்தியா), டிவிலியர்ஸ் (தெ.ஆப்.,), கெய்ல் (விண்டீஸ்) ஒரு போட்டியில் தலா 16 சிக்சர் அடித்து இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X