அரசியல் செய்தி

தமிழ்நாடு

லாரி மூலம் குடிநீர் விநியோகம்: முதல்வர் இ.பி.எஸ்.,

Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடந்து வரும் ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிகளை முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் முதல்வர் இ.பி.எஸ்., கூறுகையில், நினைவு மண்டப கட்டட பணிகளை பார்வையிட வந்துள்ளோம். நினைவு மண்டபம் ரூ. 50.8 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. 60 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
திமுக எம்.பி.,க்கள் ஹிந்தியில் படித்துள்ளனர். அவர்கள் தமிழ் வாழ்க என சொல்கின்றனர் எங்களுக்கு அவர்களை போல் நடிக்க தெரியாது. நேற்றைய தினம் உள்ளாட்சி அமைச்சர் அனை த்து அதிகாரிகளையும் அழைத்து குடிநீர் பிரச்னைகளை தீர்க்க ஆலோசனை கூறியுள்ளார். தண்ணீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. போதிய அளவு மழையில்லை. வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டது. தமிழகம், முழுவதும் குடிநீர் பிரச்னை உள்ள இடங்களில் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அக்., முதல் நவம்பர் வரை தண்ணீர் பிரச்னை சமாளிக்க வேண்டியுள்ளது.
இன்னும் 3 மாதத்திற்கு நிலத்தடி நீரை எடுத்து தான் தண்ணீர் தர வேண்டிய சூழல் உள்ளது. அரசின் நடவடிக்கைகளை புரிந்து கொண்டு, அரசுக்கு துணை நிற்க வேண்டும். ஒரு இடத்தில் உள்ள பிரச்னையை பெரிதுபடுத்தி, தமிழகம் முழுவதும் உள்ளது போல் வெளியிட வேண்டாம். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டு வீராணம் ஏரியை நிரப்பி போதுமான தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
22-ஜூன்-201918:07:12 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மணிமண்டபம் கட்டுவது ஒத்திவைக்கப்படாதோ மழை வரட்டுமே தண்ணீர் கஷ்டம் தீரட்டும் அப்பறமா கட்டலாமே ரொம்பவே அவசரம் வேண்டாமே அதேபோல சாராயம் தரும் தூய தண்ணீரை மக்களுக்கு குடிக்க சமைக்க குளிக்க தரலாமே ஐயா
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
19-ஜூன்-201906:38:56 IST Report Abuse
oce பெரிய மனிதர் என்றால் இவர் தான் பெரிய மனிதர். பொறுப்பான பதில். இவர்கள் எல்லாம் நீண்ட நாட்கள் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும். செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Chennai,இந்தியா
19-ஜூன்-201901:17:15 IST Report Abuse
Balaji ஐம்பது கோடி தண்டம். நினைவு மண்டபம் கட்டுவதால் மக்களுக்கு என்ன பயன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X