அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'தண்ணி பிரச்னையை மக்கள்
புரிஞ்சுக்கணும்: முதல்வர் இ.பி.எஸ்.

சென்னை, : ''இயற்கை பொய்த்ததால், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இன்னும், மூன்று மாதங்களுக்கு, நிலத்தடி நீரை எடுத்து தான், மக்களுக்கு வழங்க வேண்டிய சூழல் உள்ளது. இருப்பினும், மக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.

EPS,பழனிசாமி,முதல்வர்,தண்ணி பிரச்னை,மக்கள்,புரிஞ்சுக்கணும்


சென்னையில், அவர் அளித்த பேட்டி: உள்ளாட்சி துறை அமைச்சர், அனைத்து அதிகாரிகளையும் அழைத்து, குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வழி குறித்து ஆலோசித்து, தடையின்றி தண்ணீர் வழங்க, நேற்று முன்தினம் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில், போதிய மழை இல்லாததால், நிலத்தடி நீர் குறைந்துள்ளது. எங்கெல்லாம் குடிநீர் பிரச்னை உள்ளதோ, அங்கெல்லாம், லாரிகளில் குடிநீர் வழங்கப்படுகிறது.

நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால், அனைத்து தேவைகளுக்கும், குடிநீர் வடிகால் வாரியம் வழங்கும் தண்ணீரை, மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், மக்களுக்கு தேவையான குடிநீர்வழங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இன்னும் பருவ மழை துவங்கவில்லை. அக்டோபர், நவம்பர் மாதத்தில் தான், பருவ மழை துவங்கும். அதுவரை, தண்ணீர் பிரச்னையை சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்கேற்ப, நிலத்தடி நீரை எடுத்து, மக்களுக்கு வழங்கி வருகிறோம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திலும், குடிநீர் வழங்கப்படுகிறது.

பொது மக்கள், அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இன்னும், மூன்று மாதம், நிலத்தடி நீரை எடுத்து தான் மக்களுக்கு வழங்க வேண்டிய சூழல் உள்ளது. இதை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பத்திரிகைகள், ஊடகங்கள், அரசுக்கு துணை நிற்க வேண்டும். ஏதோ ஒரு இடத்தில் உள்ள பிரச்னையைபெரிதுபடுத்தி, தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை உள்ளதுபோல், மாயத் தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்.

சென்னை மாநகர மக்களுக்கு, குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டன. ஆந்திராவில்

Advertisement

இருந்து, நமக்கு கிடைக்க வேண்டிய, 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரில், 2 டி.எம்.சி., தண்ணீர் மட்டும் வழங்கினர். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டு, வீராணம் ஏரியை நிரப்பி, மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறோம். குடிநீர் பிரச்னையை தீர்க்க, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

முதல்வர் இன்று ஆலோசனை!


குடிநீர் பிரச்னை குறித்தும், அதை தீர்க்க எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, முதல்வர், இன்று ஆய்வு செய்ய உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
26-ஜூன்-201906:19:51 IST Report Abuse

B.s. PillaiWe pay for our mistakes. There was one person, though uneducated, had a vision for the people.His name is Kamaraj Avargal. Such dedicated ,sincere and intelligent and with foresight is absent today in any of DMK/AIADMK political leaders. Each and every politician is top to bottom so corrupt and only care to amass wealth for them and their generation, not worrying for the General Public, who had elected them to power. My kind advice is that we should salvage ourselves from this hardship. 1.Rain water harvesting arrangements in our dwellings,. 2.Clean the existing lakes and tanks by making groups of social minded activity persons 3. Protect these water storing lakes and tanks from encroachment,4. Dig big size wells, whether good water or salty water, but there should be one big size well for each village from where people can water for bathe and washing clothes, 5. Be alert about any factory in the area discharging wastes into the river water and if so, agitate immediately in a peaceful way to attract attention of the administration. Make plans for saving rain water in a small way in each and every village so that minimum water goes into the sea. Above all, do not accept money from political parties for your valuable votes. In my school and college times, no one paid any money for voting.So we had very good persons like KK , Kakkan elected and it is their schemes which give water t even today to Tamil Nadu people.

Rate this:
skv - Bangalore,இந்தியா
22-ஜூன்-201918:10:29 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>மக்கள் பொறுமைக்கும் எல்லை உண்டுங்க ரொம்பவே புரிஞ்சுண்டுதான் இருக்காங்கய்யா உமக்கெல்லாம் தினம் தண்ணீர் எப்படி சப்ளை என்றும் தெரியும் உமக்கும் உம்ம குடும்பங்கள் மற்றும் எல்லா அமைச்சர்களின் குடும்பங்களிலே நோ வாட்டர் ப்ராப்லம் என்பது ஓபன் ரகசியம்

Rate this:
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-201902:54:15 IST Report Abuse

C.Jeyabalanஎந்த திடடம் வந்தாலும், "இதில் எனக்கு (லஞ்சம்) எவ்வளவு கிடைக்கும்" என்பது தானே அரசு நடத்துவோரின் குறிக்கோள் அப்படியிருக்க, அவர்கள் ஏன் தண்ணீரைப் பற்றி கவலைப் பட வேண்டும்? இப்போது தேர்தல் வந்தால், அனைத்து 'திருடர்'களும் போட்டி போட்டுகொண்டு ஒவ்வொரு வீட்டுக்கும், குடம் குடமாக தண்ணீரை கொண்டு சேர்ப்பார்கள் கெட்ட நேரம், அந்த பொது தேர்தல் கொஞ்சம் முன்னமே முடிந்துவிட்டாதே

Rate this:
மேலும் 70 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X