கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கழுத்தை இறுக்கி பெண் கொலை: கணவன் மதுரை கோர்ட்டில் சரண்

Added : ஜூன் 18, 2019
Share
Advertisement

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே கழுத்தை இறுக்கி பெண் கொலை செய்தது தொடர்பாக, அவரது கணவன் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார்.தங்கச்சி மடத்தை சேர்ந்தவர் வேல்முருகன், 39; டீ மாஸ்டர். இவரது மனைவி சூர்யபிரபா,32. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கடந்த, 8 ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலுார் பேரூராட்சிக்குட்பட்ட பாரதி நகருக்கு குடி வந்தனர்.
கடந்த, 10 ம் தேதி, காலை குழந்தைகளை இங்குள்ள தனியார் பள்ளியில் சேர்த்தனர்.குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்று, மாலை வீடு திரும்பினர். பின், டியூசன் சென்று விட்டு இரவு, 8.00 மணிக்கு வந்து பார்த்தபோது, தாய் சூர்யபிரபா, வீட்டில் இருந்த கேபிள் ஒயரால் கழுத்தை இறுக்கி, கொலை செய்யப்பட்டு கிடந்தார். தந்தை வேல்முருகனை காணவில்லை. அவருடைய மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் கணவன் வேல்முருகன், மனைவி சூர்யபிரபாவை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.
இது தொடர்பாக, பெரியநாயக்கன்பாளையம் போலீசார், வேல்முருகனை கண்டுபிடிக்க, மூன்று தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், மதுரை கோர்ட்டில் வேல்முருகன் சரண் அடைந்ததாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கூறுகையில்,'சரண் அடைந்த வேல்முருகனை கஸ்டடியில் எடுத்து விசாரிப்போம் அதற்காக, போலீசார் மதுரை செல்கின்றனர் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X