பொது செய்தி

தமிழ்நாடு

மனம் இருந்தால் மார்க்கமுண்டு: பாடம் நடத்தும் 'பட்டதாரி' இளைஞர்கள்

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (3)
Advertisement
பட்டதாரி இளைஞர்கள், விவசாயம்

கோவை: விவசாயத்தின் முக்கியத்துவம் அறிந்து வரும், இளம் தலைமுறையினர் பலர், தங்கள் பணிகளையும், பட்டங்களையும் கடந்து, விவசாயிகளாக உருவெடுத்து வருவது, எதிர்கால சந்ததிக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகின்றனர்.
நிலம், நீரின் பங்களிப்பு இல்லாமல், உணவு படைக்க இயலாது என்பதை நுட்பமாக பார்த்த நம் தமிழ் சமூகம், 'உணவெனப்படுவது நிலத்தொடு நீரே' என்று, அருமையான வரையறை தந்து வியப்பூட்டியுள்ளது. எத்தனையோ சவால்களை சந்திக்கும் விவசாயிகளின் அருமை, இப்போது அதிகமாக புரிந்து கொள்ள முடிகிறது. 'சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்' என்பதை, உணர்ந்து வருகிறோம்.இதையறிந்து, இளைய சமுதாயத்தினர் பலர், விவசாயத்தில் களமிறங்கி, பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். அவ்வகையில், ஆஸ்திரேலியா நாட்டில் சிவில் இன்ஜினியராக இருந்த ராஜேஷ் கார்த்திக், தனது வேலையை உதறிவிட்டு, பால் பண்ணையில் கவனம் செலுத்தி வருகிறார்.


'பலே' பால் பண்ணை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே செஞ்சேரி மலையை சேர்ந்த இவரும், நண்பர் பிரகாசும் இணைந்து, சூலுார் முத்துக்கவுண்டன்புதுாரில், 6 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, நாட்டுப் பசுக்களை வளர்த்து வருகின்றனர்.

ராஜேஷ் கார்த்திக் கூறியதாவது:கோவையில், இன்ஜினியரிங் படிப்பு முடித்து, ஆஸ்திரேலியாவில், ஆறு ஆண்டுகள் சிவில் இன்ஜினியராக இருந்தேன். கால்நடைகள் மீதுள்ள ஆர்வத்தால், அந்த வேலையை விட்டு, விட்டு, இங்கு வந்து, நான்கு ஆண்டுகளாக பால் பண்ணை நடத்தி வருகிறேன்.குஜராத்தை சேர்ந்த, 135 'காங்கிரேஜ்' ரக பசுக்களை மட்டும் வைத்து, தினமும், 126 லிட்டர் பால் கறந்து, லிட்டர், 100 ரூபாய்க்கு விற்கிறோம். தயிர், 'மில்க் சோப்' உட்பட பால் பொருட்களும் விற்பனை செய்து வருகிறோம். இதன்மூலம், மாதத்துக்கு, ரூபாய் 1.5 லட்சம் வருமானம் கிடைக்கிறது. இன்றைய தலைமுறையினர் பலர், விவசாயத்தில் இறங்க பயப்படுகின்றனர். தன்னம்பிக்கையுடன் இறங்கினால், எங்களை போன்றோர், நிச்சயம் உறுதுணையாக இப்பார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.







ஆண்டுக்கு, 40 லட்சம்!


கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம், ராமர் பண்ணையை சேர்ந்த ஞான சரவணன், இயற்கை விவசாயத்தில், முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். முதுநிலை மனிதவளம் படிப்பு முடித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், 2017 முதல், தென்னை, காய்கறி விவசாயம், பால் பண்ணை என, பல்வேறு விஷயங்களில் பட்டையை கிளப்பி வருகிறார்.
ஞான சரவணன் கூறியதாவது:விவசாய குடும்பத்தில் பிறந்த நான், துவக்கத்தில், படிப்புக்கேற்ற வேலைக்கு சென்றேன். ஏழு ஆண்டுகளுக்கு பின், விவசாயம் தழைக்க, விளைநிலத்தில் கால் பதித்தேன். 3 ஏக்கர் நிலத்தில் காய்கறியும், 33 ஏக்கரில், தென்னை விவசாயமும் நடக்கிறது. இதற்கு தேவையான ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம், மண்புழு உரம் ஆகியவற்றை நானே தயாரிக்கிறேன்.தவிர, நாட்டு மாடு, கலப்பின மாடுகள், 35 வைத்து, அதன் வாயிலாக, தினமும், 150 லிட்டர் பால் கிடைக்கிறது. 20 கோழிகளும் உள்ளன. ஆண்டுக்கு, 35 முதல், 40 லட்சம் வருமானம் கிடைக்கிறது. இளைஞர்கள் விவசாயத்தில் தடம் பதிக்க, இதுகுறித்து பயிற்சியும் அளித்து வருகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.





இவர்களை போன்று, பலரும் விவசாயத்தை உயிர்ப்பிக்க களம் இறங்கி வருகின்றனர். அதேசமயம், சவால்கள் கொண்ட விவசாயம் தழைத்திட, அரசும், விவசாயம் சார்ந்த பயனுள்ள திட்டங்களை தீவிரப்படுத்தினால், விவசாயம் முழுவதும் இளைஞர்கள் கையில் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ராஜேஷ் கார்த்திக் 90705 07050.
ஞான சரவணன்99626 88000.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூன்-201915:39:59 IST Report Abuse
ருத்ரா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தினம் ஒரு விதமாக யோசித்து ஆர்பாட்டம் நடத்துவதை விட உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்து உழவின் மேன்மையை உணர்த்திய நீங்கள் மிகச்சிறந்த முன்உதாரணங்கள். பெருமையுடன் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நண்பர்களே. பசுமை எண்ணத்திலும் செயலிலும். Great
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
19-ஜூன்-201914:35:17 IST Report Abuse
pattikkaattaan வாழ்த்துக்கள் சகோதரர்களே .. கூடிய விரைவில் நானும் விவசாயத்தில் இறங்கிவிடுவேன் .. யாருக்கும் பயப்படாமல் உழைத்து வாழலாம்
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
19-ஜூன்-201905:00:21 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மிக்க நன்று உங்களைப்போலவே பல பட்டதாரிகளும் முன்வரணும் வேலை இல்லேன்னு உக்காராமல் உழவுத்தொழிலுக்கு வருவது பெஸ்ட் வயலும் மண்ணும் ஏமாத்துமா , ஒருமுகமா பனைமரங்கள் வளர்க்கவும் நீர்வளம் பெருகும் என்பது உண்மை கெமிக்கல் உரம் சேர்க்காமல் இயற்கை உரம் சேர்த்தாலே நல்ல பலன் கிட்டும் வாழ்க உமது பணி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X