பதிவு செய்த நாள் :
வியூகம்!
பார்லிமென்டில் பா.ஜ.,வை சமாளிக்க காங்.
'ஒரே தேசம், ஒரே தேர்தல்' குறித்தும் ஆலோசனை

புதுடில்லி: பார்லிமென்ட் கூட்டத் தொடர் துவங்கியுள்ள நிலையில், ஆளும் கட்சியின் சவாலை எதிர்கொள்வது தொடர்பாக, காங்., மூத்த தலைவர்கள், நேற்று ஆலோசனை நடத்தினர். லோக்சபா மற்றும் சட்டபை தேர்தலை, ஒரே நேரத்தில் நடத்த ஒத்துழைப்பு அளிக்கும்படி, பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை குறித்தும், நேற்றைய கூட்டத்தில்விவாதிக்கப்பட்டது.

BJP, பா.ஜ.,சமாளிக்க,காங்., வியூகம்


பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, 17வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் துவங்கியுள்ளது. முதல் இரண்டு நாட்கள், புதிய, எம்.பி.,க்கள் பதவியேற்பு நடந்த நிலையில், இன்று, லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடக்கிறது.

அதிக பலம்


அதற்கு பின், பட்ஜெட் தாக்கல், விவாதம், பதிலுரை என, அலுவல்கள் தொடரவுள்ளன. இந்த முறை, பா.ஜ., தலைமையிலான ஆளும், தே.ஜ., கூட்டணி, லோக்சபாவில், 350க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், அதிக பலத்துடன் உள்ளது. 'எதிர்க்கட்சிகள் குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், அவர்களது குரல்களுக்கு பதில் அளிக்கப்படும்; மதிப்பு அளிக்கப்படும்' என, பிரதமர் மோடி கூறியிருந்தாலும், ஆளும் கட்சியினரின் நெருக்கடிகளை, காங்கிரஸ் உறுப்பினர்கள், எப்படி சமாளிக்கப் போகின்றனர் என்ற, கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த குறைந்த,எம்.பி.,க்களை வைத்து, ஆளும் கட்சியினர் தரும்

நெருக்கடியை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், டில்லியில், நேற்று ஆலோசனை நடத்தினர்.

காங்கிரஸ் பார்லிமென்ட் குழு தலைவர் சோனியா, காங்., தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்., மூத்த தலைவர்கள் அந்தோணி, சிதம்பரம், குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர், இந்த ஆலோசனையில்பங்கேற்றனர்.

நெருக்கடி


இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது:இரண்டு சபைகளிலும், ஆளும் கட்சியினரை சமாளிப்பது பற்றியும், என்னென்ன பிரச்னைகளை எழுப்பி, ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. வறட்சி, வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளை, சபையில் எழுப்பவும் திட்டமிடப்பட்டது.

ஒரே நேரத்தில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை நடத்துவது தொடர்பாகவும், நாட்டின், 75வது சுதந்திர தின விழாவை, 2022ல் கொண்டாடுவது தொடர்பாகவும், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன், பிரதமர் மோடி, இன்று ஆலோசனைநடத்தவுள்ளார்.இதில், காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும், ஆலோசிக்கப்பட்டது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விவாதம்


ஆலோசனை கூட்டம் முடிந்ததும், காங்கிரஸ் மூத்த தலைவரான, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, செய்தி யாளர்களிடம் கூறியதாவது:சபாநாயகர் தேர்தல் தொடர்பாக, இந்த கூட்டத்தில், எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மதிப்பு அளிக்கப்படும் என, பிரதமர் கூறியுள்ளார். ஜனநாயகம் என்பது,எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து மதிப்பிடுவது அல்ல. விவாதம், பேச்சு, மாற்றுக் கருத்து ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே, ஜனநாயகத்தை மதிப்பிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி காங்., லோக்சபா தலைவர்


லோக்சபாவில், காங்கிரசுக்கு, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. ஆனாலும், பா.ஜ.,வுக்கு அடுத்தபடியாக, 52 எம்.பி.,க்களுடன், இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது.கடந்த முறை, காங்., லோக்சபா தலைவராக இருந்த,மல்லிகார்ஜுன கார்கே, தற்போது தேர்தலில், தோல்வி அடைந்து விட்டார். இதையடுத்து, புதிய தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, இந்த பொறுப்பை ஏற்பதில் விருப்பமில்லை. கேரள மாநிலத்தை சேர்ந்த, சசி தரூர், சுரேஷ், காங்., செய்தி தொடர்பாளர், மணீஷ் திவாரி, மூத்த தலைவர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரில், யாராவது ஒருவர் தேர்வு செய்யப்படுவர் எனக், கூறப்பட்டது.இந்நிலையில், காங்., லோக்சபா தலைவராக, ஆதிர் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அந்த கட்சி சார்பில், லோக்சபா செயலருக்கு, நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளதாக, தகவல் வெளியானது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த, ஆதிர் சவுத்ரி, 63, ஐந்து முறை, எம்.பி.,யாக பணியாற்றிய அனுபவம் உடையவர். அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே, கட்சியின் லோக்சபா தலைவராக, அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல், மத்திய அமைச்சரும், பா.ஜ., வேட்பாளருமான, ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில், தனக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, ராகுல், இம்மாத இறுதியில், அமேதி செல்லவுள்ளதாக, காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூன்-201919:15:59 IST Report Abuse

ஆப்புநீங்க கூவுறதை கூவுங்க. ஆனால் பா.ஜ குடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை. கொஞ்ச நாள்ளே சாயம் வெளுத்திரும். ஆனா, நீங்க ஆட்சிக்கு வந்திருந்தாலும் இதே தான்.

Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
19-ஜூன்-201914:47:46 IST Report Abuse

Sivaசெய்தி படித்து தான் கருத்து போடுவதா. செத்த பாம்பு செத்ததுதான்.....

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-ஜூன்-201910:56:39 IST Report Abuse

இந்தியன் kumarகாங்கிரஸ் ஆக்கப்பூர்வமாக செயல்படாவிட்டால் மக்கள் பூரணமாய் காங்கிரஸ் கட்சியை ஒதுக்கி விடுவார்கள்.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X