பொது செய்தி

இந்தியா

லைசென்ஸ் பெறும் கல்வித் தகுதி ரத்து

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (12)
Advertisement
லைசென்ஸ்,கல்வித்தகுதி, மத்திய அரசு, ரத்து

புதுடில்லி: போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கான, 'லைசென்ஸ்' பெறுவதற்கு உள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கான லைசென்ஸ் பெறுவதற்கு, குறைந்தபட்சம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், இந்த குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.






இது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கிராமப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கான லைசென்ஸ் பெறுவதற்கு உள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதி நீக்கப்படுகிறது.இதன் மூலம், கிராமப் பகுதிகளில் உள்ள, படிக்காத, அதே நேரத்தில், திறன் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதையடுத்து, இந்த குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

அதே நேரத்தில், வாகனத்தை இயக்குவதற்கான திறன் இருக்க வேண்டும். போக்குவரத்து விதிகள் தொடர்பாக அறிந்திருக்க வேண்டும். அதற்காக நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். போக்குவரத்து பயிற்சிப் பள்ளிகளில் முறையாக பயிற்சி பெற வேண்டும் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LovelyMarees - Kutty Japan, Cracker City.,இந்தியா
19-ஜூன்-201911:44:56 IST Report Abuse
LovelyMarees மெத்த படிச்சவங்கலே சாலை விதியை சரியாக கடைபிடிப்பதில்லை. இதில் கல்வி தகுதியே இல்லாமல் ஓட்டுநர் உரிமம் கொடுக்கப்போறிங்களா?
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-ஜூன்-201910:45:53 IST Report Abuse
A.George Alphonse Subam.
Rate this:
Share this comment
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
19-ஜூன்-201908:37:12 IST Report Abuse
shyamnats மிகவும் தவறான அணுகுமுறை. வயதானவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கலாமே தவிர இனி வரும் தலைமுறைகளுக்கு கல்வி தகுதியை உயர்த்த வேண்டும். ஏற்கனவே தண்ணியடிச்சிட்டு மற்றவர்களை விபத்தில் ஈடுபடுத்துபவர்களை மேலும் அறிவிப்பு பலகைகளை படிக்க முடியாத அறியாமையாலும் விபத்து ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது. வேலை வாய்ப்பை பெருக்குகிறேன் என்று முறையாக படிக்காதவர்களை மருத்துவம் செய்ய அனுமதிப்பதை போன்றதே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X