பதிவு செய்த நாள் :
அனைத்து எம்.பி.,க்களும் பதவியேற்பு

புதுடில்லி: சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற, 542,எம்.பி.,க்களும், பதவியேற்றுக் கொண்டனர்.

MP,எம்.பி.,பதவியேற்பு


சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, நரேந்திர மோடி, மீண்டும் பிரதமராக பதவியேற்றார். புதிய அரசு அமைந்தப் பிறகு, பார்லி.,யின் முதல் கூட்டத் தொடர், நேற்று முன்தினம் துவங்கியது.நேற்று முன்தினம், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதலில், எம்.பி.,க்களாக பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து, ஆங்கில அகரவரிசைப்படி, ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், பதவிப் பிரமாணம்எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும், எம்.பி.,க்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். சமாஜ்வாதி கட்சி நிறுவனர், முலாயம் சிங் யாதவ், 79, உடல்நலம் சரியில்லாததால், 'வீல் சேரில்' அழைத்துவரப்பட்டார். அவருடன் அவருடைய மகனும், உ.பி., முன்னாள் முதல்வருமான, அகிலேஷ் யாதவ் வந்தார்.

சபையின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான அவருக்கு, உடல்நலம் சரியில்லாததால், முதலிலேயே பதவியேற்க சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது.பா.ஜ.,வைச் சேர்ந்த, சபாநாயகர் பதவிக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, ஓம் பிர்லா வந்தபோது, பா.ஜ., - எம்.பி.,க்கள், மேஜையை தட்டி பலத்த வரவேற்பு அளித்தனர்.

காங்., மூத்த தலைவர், சோனியா, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்தியஅமைச்சர், மேனகா, சிரோன்மணி அகாலி தளத் தலைவர், சுக்பிர் சிங் பாதல், பா.ஜ.,வைச் சேர்ந்த, பிரபல நடிகர் சன்னி தியோல் உள்ளிட்டோர், நேற்று பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.டில்லியில் ஆளும்,

Advertisement

ஆம் ஆத்மி கட்சியின், ஒரே, எம்.பி.,யான, பகவந்த் மான், பதவியேற்றபோது, 'இன்குலாப் ஜிந்தாபாத்' என, கோஷம் எழுப்பினார்.

காங்கிரஸ் தலைவர், ராகுல் உட்பட, கேரளாவைச் சேர்ந்தவர்கள், நேற்று முன்தினம் பதவியேற்றனர். நேற்று முன்தினம் வர முடியாத, முன்னாள் மத்திய அமைச்சர், சசி தரூர், நேற்று பதவியேற்றுக் கொண்டார்.வரும், ஜூலை, 26ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில்,இன்று, லோக்சபாசபாநாயகருக்கான தேர்தல் நடக்க உள்ளது.நாளை, இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் உரையாற்றஉள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
19-ஜூன்-201904:09:56 IST Report Abuse

blocked userஹிந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளி வைத்து இருக்கும் கட்சி உறுப்பினர்கள் கூட தமிழில் உறுதி மொழி எடுத்துக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X