பதிவு செய்த நாள் :
மூளைக்காய்ச்சலை தடுக்க முடியாதா?:
பொதுமக்கள் போராட்டத்தால் முதல்வர் அதிர்ச்சி

முசாப்பர்பூர்: பீஹாரில், மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 133 ஆக அதிகரித்துள்ள நிலையில், நேற்று, முசாப்பர்பூர் மருத்துவமனைக்கு வந்த, முதல்வர் நிதிஷ் குமாரை முற்றுகையிட்டு, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

மூளைக்காய்ச்சல், தடுக்க முடியாதா?


பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள முசாப்பர்பூர் மாவட்டத்தில், சமீபகாலமாக, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது.

தனியார் மருத்துவமனை


கடந்த சில நாட்களில் மட்டும், 103 குழந்தைகள், பரிதாபமாக இறந்தன. இந்நிலையில், முசாப்பர்பூரில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள், நேற்றும் இறந்தன. இதையடுத்து, மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை, 133 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல குழந்தைகள், உயிருக்கு ஆபத்தான நிலையில்,

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன. போதிய படுக்கை வசதி இல்லாததால், தரையில் படுக்க வைத்து, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உத்தரவு


இந்நிலையில், கடந்த சில நாட்களாக, டில்லியில் முகாமிட்டிருந்த, முதல்வர் நிதிஷ் குமார், நேற்று, பீஹார் திரும்பினார். துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மற்றும் அமைச்சர்களுடன், முசாப்பர்பூர் மருத்துவமனைக்கு வந்த முதல்வர், சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்வையிட்டார்.டாக்டர்களுடன் ஆலோசனை நடத்திய பின், மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை அதிகரிக்கும்படி உத்தரவிட்டார். இதற்கிடையே, முதல்வர் ஆய்வு நடத்திய, எஸ்.கே.எம்., மருத்துவமனை முன், ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

'மூளைக்காய்ச்சலை கட்டுப்படுத்தாத முதல்வர் நிதிஷ் குமார், இங்கிருந்து திரும்பி போக வேண்டும்' என, கோஷம் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. மேலும்,'இத்தனை நாட்களாக, இந்த விவகாரத்தில், முதல்வர் மெத்தனமாக செயல்பட்டது ஏன்' என்றும் கேள்வி எழுப்பினர்.

காரணம் என்ன?


பீஹாரில் ஏற்பட்டுள்ள, மூளைக்காய்ச்சல் பாதிப்பு குறித்து, அங்குள்ள டாக்டர்கள் தரப்பில்

Advertisement

கூறப்படுவதாவது:முசாப்பர்பூர் மாவட்டத்தில், லிச்சி பழங்கள் அதிகம் விற்பனையாகின்றன. இந்த பழத்தை சாப்பிடு வதால், பல நன்மைகள் இருந்தாலும், அதில் உள்ள சில நச்சுப் பொருளால், தீமையும் ஏற்படுகிறது.

போதிய ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள், அந்த பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள நச்சுப்பொருள், அந்த குழந்தையின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து விடும். இதன் காரணமாக, அந்த காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம். அதேநேரத்தில், மூளைக்காய்ச்சல் ஏற்படுவதற்கு, லிச்சி பழம் மட்டுமே காரணம் என, கூறி விட முடியாது. வைரஸ் தொற்று, ஊட்டச்சத்தின்மை போன்றவையும், காரணமாக இருக்கலாம்.இவ்வாறு, அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமான காய்ச்சல், வலிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாக குறைவது போன்றவை, இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் என, டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
19-ஜூன்-201920:53:19 IST Report Abuse

J.Isaacதெர்மாக்கூல் கதை மாதிரிதான்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஜூன்-201917:46:37 IST Report Abuse

Endrum Indianலிச்சி பழம் சாப்பிடுவாதால் என்று சொல்லிவிட்டு அதனால் மட்டும் இல்லை என்றால் என்ன அர்த்தம்????குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக இருக்கின்றது. சீனாவில் இது தடை செய்யப்பட்டிருக்கின்றது இதனால் .

Rate this:
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
19-ஜூன்-201914:11:43 IST Report Abuse

Dinesh Pandianதடுப்பூசி போட வேண்டும்

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X