சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கோவையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதி!
பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி., உத்தரவு

கோவை: இலங்கையில், ஓட்டல், சர்ச்களில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது போன்று, தற்கொலைப் படை தாக்குதலை கோவையில் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவல்கள், அம்பலமாகியுள்ளன.இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு, கோவை போலீசாருக்கு, டி.ஜி.பி., அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை,பாதுகாப்பு,பலப்படுத்த,உத்தரவு


தொடர்பு


இலங்கையில், ஏப்., 21, ஈஸ்டர் தினத்தன்று, கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த தொடர்குண்டுவெடிப்பு தாக்குதலில், 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 500 பேர் காயமடைந்தனர். இக்கொடூர தாக்குதலுக்கு, சர்வதேச பயங்கரவாத இயக்கமான, ஐ.எஸ்., பொறுப்பேற்றது.

இத்தாக்குதல் சதிகாரர்களுடன்,கோவை இளைஞர்களுக்கு, சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்பு இருப்பது தெரிந்தது.இதையடுத்து,தேசிய புலனாய்வு முகமை-என்.ஐ.ஏ., அதிகாரிகள், சமீபத்தில் கோவையின் பல இடங்களில் சோதனை நடத்தி, இருவரை கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து, கோவை மாநகர போலீசார், உக்கடத்தைச் சேர்ந்த ஷாஜகான், 27, முகமது உசேன், 30, கரும்புக்கடையைச் சேர்ந்த ஷேக் ஷபியுல்லா, 28, ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்நபர்கள், ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மூவரையும், போத்தனுார் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

போத்தனுார் போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், கோவையில் உள்ள கோவில் மற்றும் கிறிஸ்துவ தேவாலயங்களில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் போன்று, தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக, அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

'ஆலோசனை'


முதல்தகவல் அறிக்கை விபரம்:
கைது செய்யப்பட்டுள்ள ஷாஜகான், 27; முகமது உசேன், 30; ஷேக் ஷபியுல்லா, 28, ஆகியோர் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இவர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு குறித்து, தங்களுக்குள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.'இலங்கை தற்கொலைப்படை தாக்குதல் மூலம், பலரை கொன்ற, ஜாக்ரன் ஹாசிம் மற்றும் அவனது கூட்டாளிகளின் தியாகம் பெரியது' என, பெருமை பேசியுள்ளனர்.

கத்தியால் எப்படி கொலை செய்வது, 'டிரக்' போன்ற வாகனங்கள் மூலம் எப்படி தாக்குதல் நடத்துவது போன்றவற்றை விளக்கும் படங்களை வைத்து, தங்களுக்குள் ரகசியமாக பேசி வந்துள்ளனர். இந்த படங்களை, தங்களுக்கு தெரிந்த வெளிநாட்டு நபர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

சதி திட்டம்


ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு போன்று, கோவையில் தற்கொலைப்படை தாக்குதல் மூலம் அசம்பாவித சம்பவங்களை நடத்தி, தங்களை தியாகம் செய்து கொள்ள, சதி திட்டம் போட்டுள்ளனர்.இவர்களை எளிதாக எடுத்து கொள்ள முடியாது. சிரியா, ஐ.எஸ்., போர் காட்சி வீடியோக்களை, அதிகளவு பகிர்ந்து வந்துள்ளனர்.மேலும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தகவல்களை, தமிழில் மொழி பெயர்க்கவும் செய்துஉள்ளனர்.

கோவை மாநகரில், இவர்களின் பலத்தை காட்ட, கோவில்கள், சர்ச்கள், பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில்,

Advertisement

பயங்கர தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.இவர்களின் பேச்சு மற்றும் செயல்பாடுகள் மூலம், தீவிர மத அடிப்படைவாதிகள் என்பது தெரியவருகிறது. இதன் அடிப்படையில், குறிப்பிட்ட மூன்று பேர் மீது, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டமான, 'உபா' சட்டத்தில், வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோவையில் அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்களை, கண்காணித்து வரும், டி.ஜி.பி., அலுவலகம், பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிதீவிரம் காட்டுமாறு, கோவை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இருவரிடம் விசாரணை


கடந்த, 12ம் தேதி, கோவை, உக்கடம், போத்தனுார், கரும்புக்கடை, குனியமுத்துார் ஆகிய இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். முடிவில், முகமது அசாருதீன், 32, ஷேக் இதயதுல்லா, 32, ஆகிய இருவரை கைது செய்து, கொச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கேரள சிறையில் அடைத்தனர். இவர்களை, 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க கோரி, கொச்சி, என்.ஐ.ஏ., சிறப்பு கோர்ட்டில், அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

விசாரித்த நீதிபதி, இருவரையும், ஐந்து நாட்கள், 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க, நேற்று முன்தினம் மாலை அனுமதி அளித்தார்.இதையடுத்து, இருவரையும், என்.ஐ.ஏ., - டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள், 'கஸ்டடி' எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பல்வேறு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Being Justice - chennai ,இந்தியா
19-ஜூன்-201919:21:56 IST Report Abuse

Being Justice இது போன்ற வதந்திகளை பரப்புவோருக்கு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்

Rate this:
Appan - London,யுனைடெட் கிங்டம்
19-ஜூன்-201916:17:02 IST Report Abuse

Appanஅடிப்படையில் இந்து மத வாழ்வு முஸ்லிம்களுக்கு ஒத்து போகாது..இந்து மதம் மத தர்க்கத்தை அதாவது மதம் பற்றி விவாதிக்கலாம்..ஆறாம் நூற்றாண்டில் களப்பிரரின் சமண மதத்தை சைவர்கள் தர்க்கத்தால் வென்று சமணத்தை தமிழகத்தில் ஒழித்தார்கள்..முஸ்லிம் மத்தை பற்றி யாரும் பேசமுடியாது.. பேசினால் உயிர் இருக்காது..இப்படி பட்ட மத கோட்பாட்டை எப்படி வளர்ந்த இந்து மதம் சகிக்கும்..சீனா, பர்மா போல் இவர்களை மத மாற்றம் செய்யணும்.. இல்லை திரும்பி அனுப்பனும்..அப்போ தான் நாட்டில் அமைதி நிலவும்..

Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
19-ஜூன்-201913:40:13 IST Report Abuse

திண்டுக்கல் சரவணன்1998 கோவை குண்டுவெடிப்புக்கு பின் முஸ்லீம்களின் நிலைமை என்ன ஆனது என்று நினைவில் வைத்துக் கொள்ளட்டும். இஸ்லாமிய சமூகம் அதில் இருக்கும் பிக்காலி கும்பல்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அந்த சமூகமே பெரிய விலை கொடுக்க வேண்டியது இருக்கும்.

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X