மார்கன் சதம்: இங்கிலாந்து வெற்றி

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019
Advertisement
மார்கன், சதம், இங்கிலாந்து, வெற்றி

மான்செஸ்டர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரானஉலக கோப்பை லீக் போட்டியில்இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.சிக்சர் மழை பொழிந்த கேப்டன் மார்கன்71 பந்தில் 148 ரன்கள் விளாசினார்.

இங்கிலாந்தில் 12 வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. மாஸ்செஸ்டரில் நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன், பேட்டிங் தேர்வு செய்தார்.







மார்கன் 'வேகம்'

இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோவ், ஜேம்ஸ் வின்ஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. 31 பந்தில் 26 ரன் எடுத்த போது வின்ஸ், தவ்லத் பந்தில் அவுட்டானார். இரண்டாவது விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்த போது, பேர்ஸ்டோவ் (90) அவுட்டாகினார். ஜோ ரூட், நான்காவது அரைசதம் அடித்தார். வந்த வேகத்தில் இருந்து சிக்சர் மழை பொழிந்தார்கேப்டன் மார்கன்.

இத்தொடரில் உள்ள மற்றவற்றை விட சிறிய மைதானமான இங்கு, ஆப்கானிஸ்தான் பவுலர்களும் சுமாராக செயல்பட, மார்கன் 57 வது பந்தில் சதம் விளாசினார். ஒருநாள் அரங்கில் இது இவரது 13வது சதம். 3வது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்த போது, குல்பதீன் ஓவரில் ஜோ ரூட் (88) அவுட்டானார்.

இதே ஓவரின் கடைசி பந்தில் மார்கனும் (148 ரன், 71 பந்து) வீழ்ந்தார். பட்லர், ஸ்டோக்ஸ் தலா 2 ரன் எடுத்தனர். மொயீன் அலி (31), வோக்ஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 397 ரன்கள் குவித்தது.


ஹஸ்மதுல்லா ஆறுதல்



இமாலய இலக்கைத் துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு நுார் அலி, குல்பதீன் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. ரன் கணக்கைத் துவக்காத நுார் அலி, ஆர்ச்சர் பந்தில் போல்டானார். கேப்டன் குல்பதீன் 37 ரன் எடுத்தார்.ரஹ்மத் 46, அஸ்கர் 44 ரன்கள் எடுக்க, முகமது நபி 9 ரன் எடுத்தார்.

சற்று தாக்குப்பிடித்த ஹஸ்மதுல்லா 76 ரன்கள் எடுத்து திரும்பினார்.நஜிபுல்லா (15) நிலைக்கவில்லை. ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 247 ரன்கள்மட்டும் எடுத்தது. 1975க்குப் பின் உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி இமாலாய வெற்றியை பதிவு செய்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X