பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சென்னை சுங்க அதிகாரி உள்பட 15 பேருக்கு
கட்டாய ஓய்வு தொடரும் மத்திய அரசின் அதிரடி

புதுடில்லி: லஞ்சம் வாங்கியது, ஊழல் செய்தது, அதிக சொத்து குவித்தது என, பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள, சுங்கம் மற்றும் கலால் துறையைச் சேர்ந்த, 15 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை சுங்க அதிகாரியும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஊழல் அதிகாரி,கட்டாய ஓய்வு


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் அமைந்த பிறகு, ஊழல் அதிகாரிகள் மீதான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு வழக்குகளில் சிக்கிய, வருமான வரித் துறையைச் சேர்ந்த, 12 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து, சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், நான்கு அதிகாரிகள், பதவியில் இருந்து கீழிறக்கப்பட்டனர்.

இந்நிலையில், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தைச் சேர்ந்த, 15 உயர் அதிகாரிகள், வேலையில் இருந்து நீக்கப்பட்டு,

அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கியது, ஊழல் செய்தது, வருமானத்தைவிட அதிக சொத்து குவித்தது, மிரட்டியது என பல்வேறு குற்றங்கள் செய்ததாக, இந்த நடவடிக்கைபாய்ந்துள்ளது.

இது குறித்து, மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு புகார்களின்படி, சி.பி.ஐ.,யால் வழக்கு தொடரப்பட்ட, ஏற்கனவே சஸ்பென்ட் செய்யப்பட்ட, சுங்கம் மற்றும் கலால் துறையைச் சேர்ந்த, 15 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் வகையில், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இவர்கள், முதன்மை கமிஷனர் பதவியில் இருந்து, உதவி கமிஷனர் வரை பதவி வகித்தவர்கள். இவர்களில், ஐந்து பேர் ஐ.ஆர்.எஸ்., எனப்படும் இந்திய வருவாய் சேவை அதிகாரிகள்.

சென்னையைச் சேர்ந்த, கமிஷனர் பதவியில் இருந்த, ஜி. ஸ்ரீ ஹர்ஷாவும், இவர்களில் ஒருவர். வருமானத்துக்கு அதிகமாக, 2.24 கோடி ரூபாய்அளவுக்கு சொத்து சேர்த்ததாக இவர் மீது வழக்கு உள்ளது. சி.பி.ஐ., அதிகாரிகள் இவரைக் கண்காணித்து, பொறி வைத்து பிடித்தனர். டில்லியில் உள்ள, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தில் பணியாற்றி வந்த, முதன்மை கமிஷனரான அனுாப் ஸ்ரீவத்சவா,

Advertisement

இந்த வாரியத்தின் இணை கமிஷனர், நலின் குமார் ஆகியோரும் இந்த நடவடிக்கையில் சிக்கியுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள, ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் சங்கத் தலைவரான, அனுாப் ஸ்ரீவத்சவா, தன் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:என் மீது தொடரப்பட்ட வழக்குகளில், நான் குற்றம் ஏதும் செய்யவில்லை என, நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்துள்ளன.

கடந்த ஆண்டு எனக்கு பதவி உயர்வு கிடைப்பதாக இருந்தது. ஆனால், வருவாய் துறைச் செயலர், அஜய் பூஷண் பாண்டே, தனிப்பட்ட வெறுப்பில், அது கிடைக்காமல் செய்தார். தற்போது, இந்த நடவடிக்கைக்கும் அவர் தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambika. K - bangalore,இந்தியா
19-ஜூன்-201920:40:52 IST Report Abuse

Ambika. Kதமிழனை முட்டாளாக்கிய குடும்பம் பிஜேபி // எங்கே ஒரு உதாரணம் காட்டுங்க.

Rate this:
Vijay - Chennai,இந்தியா
19-ஜூன்-201916:22:13 IST Report Abuse

Vijayதமிழனை முட்டாளாக்கிய குடும்பம் பிஜேபி தமிழ் நாட்டில் தோல்வியை தந்தது. இது மாதிரி எத்தனை வேலைகள் மக்களுக்கு தெரியும். மேலும் செய்தால் காழ்ப்புணர்ச்சி என்பார்கள். தமிழன் தான் இரக்க குணம் உடையவன் என்று தெரியும். நல்லா ஏமாற்றுகிறார்கள். பாரபட்சம் பார்க்காமல் தவறு செய்த எல்லோரையும் டிஸ்மிஸ் செய்து உள்ளே போட வேண்டும்.

Rate this:
K.n. Dhasarathan - chennai,இந்தியா
19-ஜூன்-201916:18:12 IST Report Abuse

K.n. Dhasarathanகட்டாய ஓய்வு கொடுத்தால் என்ன குற்றம் வேண்டுமென்றாலும் செய்யலாமா ? ஓய்வு கொடுங்கள் குற்றத்திற்கு முகாந்திரம் இருந்தால். ஆனால் நீதி மன்ற விசாரணை, தண்டனை போன்றவையும் தொடர வேண்டும். இல்லையெனில் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூட குற்றம் சுமத்தப்படலாம்.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X