சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மக்கள் முன்னிலையில் வாலிபர் வெட்டிக்கொலை

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
மக்கள் முன்னிலையில் வாலிபர் வெட்டிக்கொலை

மதுரை : மதுரை புதுார் பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று காலை, வாலிபர், ஓட ஓட விரட்டி, வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மதுரை, புதுார் காந்திபுரத்தைச் சேர்ந்தவர், ஆறுமுகம், 22. கஞ்சா வைத்திருந்ததாக, கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்தார். 10 நாட்களாக, புதுார் ஸ்டேஷனில், தினமும் காலை கையெழுத்திட்டார்.நேற்று காலை, 10:00 மணிக்கு கையெழுத்திட்டு, டூ- வீலரில், புதுார் பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்தார்.

அப்போது, இரு டூ - வீலர்களில் வந்த நால்வர், பஸ் ஸ்டாண்ட் அருகே, ஆறுமுகத்தை வழிமறித்து, ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர்.தப்பி ஓடியபோது போலீசாரிடம், பாலமுருகன் என்பவன் மட்டும் சிக்கினான். மற்றவர்களை தேடி வருகின்றனர்.போலீசார் கூறியதாவது: பழிக்குப்பழி மதுரை, ஆத்திக்குளத்தைச் சேர்ந்தவர், தினேஷ். இவரது வீட்டருகே, 'புறா' பாண்டி என்ற ரவுடியின் வீடு உள்ளது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், பாண்டியை, தினேஷ், சகோதரர் சரவணன் தாக்கினர்.இந்த முன்விரோதத்தில், கடந்தாண்டு, ஏப்., 13ல், தினேஷ் கொலை செய்யப்பட்டார்.

இதனால், பாண்டி அல்லது அவனது தரப்பைச் சேர்ந்தவரை கொலை செய்ய, தினேஷின் சகோதரர் சரவணன் திட்டமிட்டான். இதன்படி, பாண்டியின் பெரியம்மா மகனான ஆறுமுகத்தை, நேற்று கொலை செய்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.போலீசாரை கொல்ல முயற்சிகொலை சம்பவத்தின் போது, புதுார் பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து போலீசார், கவர்னர், முத்துபாண்டியன் ஆகியோர், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கொலை நடந்த தகவல் தெரிந்தது.இருவரும் சம்பவ இடத்திற்கு சென்றபோது, எதிரே கொலையாளிகள் தப்பி ஓடி வந்தனர். இதை பார்த்த கவர்னர், தன் ஷூவை கழற்றி வீசினார். அது, பாலமுருகன் மீது பட்டு, அவன் நிலைகுலைந்தான்.அவனை கவர்னர் பிடித்தபோது, கத்தியால் குத்த முயன்றான். அப்போது, அங்கிருந்த ஒருவர், பாலமுருகனை பின்பக்கம் பிடித்ததால், கத்திக்குத்தில் இருந்து, கவர்னர் தப்பினார். போலீசார் இருவரையும், உயர் அதிகாரிகளும், மக்களும் பாராட்டினர்.---போலீஸ் பயம் போச்சு!சமீபகாலமாக, மதுரையில், பகலிலேயே சர்வசாதாரணமாக கொலைகள் நடப்பது தொடர்கிறது. கோர்ட்டில் சரணடைந்து விட்டால், போலீசில் அடி வாங்காமல், பாதுகாப்பாக சிறைக்கு சென்று, ஜாமினில் வந்துவிடலாம்.

காவலுக்கு எடுத்து விசாரிக்கும் போதும், 'ராஜமரியாதை' கிடைக்கும். பின் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி, விடுதலையாகி விடலாம்' என்பதே காரணம்.அதே சமயம், பழிக்குப் பழியாக கொலை செய்யப்படுவோம் என தெரிந்தும், நட்புக்காகவும், ஜாதி ரீதியாகவும், 22 - 28 வயதிற்குட்பட்டவர்கள், புது கொலையாளிகளாக உருவெடுத்து வருவது, போலீசாருக்கு தலைவலியாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
24-ஜூன்-201910:43:01 IST Report Abuse
Jayvee பெயில் எவ்வளவு ரூவா ?
Rate this:
Cancel
rajendiran - chennai,இந்தியா
22-ஜூன்-201910:21:36 IST Report Abuse
rajendiran வாழ வேண்டிய வயசில ஏன் அடித்துக்கொண்டு சாகிறீர்கள் , பாரம்பரியமிக்க ஆன்மீக பூமி மதுரை ஏன் இப்படி ஆனது , யோகா செய்தால் உடலும் மனதும் சீராகும் , மத்திய அரசு யோகா கொண்டு வந்தால் அதை எதிர்க்க தான் வரிந்து கட்டி கொண்டு தமிழர்கள் வருவார்கள் , அதன் அருமை தெரியாமல் , எல்லாம் திராவிடத்தின் சாதனைகள் தான்.
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஜூன்-201900:32:35 IST Report Abuse
Ramesh Rஏன் குஜராத்தில் அடித்துக்கொண்டு சாவதில்லையா? போங்கய்யா வாயை முடி கொண்டு...
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
23-ஜூன்-201912:45:11 IST Report Abuse
THENNAVANரமேஷ் அண்ணன் உங்களுக்கு நல்ல மனசு அப்படியே கட்சு குடாவில் உள்ள தீவுக்கு போய் இம்ரான் கானிடம் ஒரு குச்சி ஐஸ் வாங்கி சாப்பிடடுங்கீங்கனா உங்களுக்கு வந்திருக்கும் செலெக்ட்டிவ் அம்னீசியா என்ற வியாதி மேலும் பரவாமல் இருக்க வாய்ப்பு இருக்கு....
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22-ஜூன்-201904:50:31 IST Report Abuse
 nicolethomson இவர்களுக்கு சப்போர்ட் செய்யும் கசுமால கட்சிகளுக்கு முதலில் ஆப்பு வைக்கோணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X