எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பரபரப்பு...!
உரசிக் கொண்ட பா.ஜ., - தி.மு.க.,

புதிய லோக்சபாவின், முதலாவது கூட்டத் தொடரில், முக்கிய பிரச்னைகள் பல காத்துக் கொண்டிருக்கும் நிலையில், முதல்கட்டமாக நடைபெறும், பதவியேற்பு நிகழ்ச்சியிலேயே, ஆளும் கட்சியான, பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கும், உரசல் ஏற்பட்டுள்ளதால், பரபரப்பு அதிகரித்துள்ளது.லோக்சபாவில், புதிய, எம்.பி.,க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி, நேற்று முன்தினம் துவங்கியது. அகர வரிசைப்படி, மாநிலங்கள் பட்டியலிடப்பட்டு, அதற்கேற்ப, எம்.பி.,க்கள் அழைக்கப்பட்டனர்.

உரசிக் கொண்ட பா.ஜ., - தி.மு.க.,

உறுதிமொழி


அதன்படி, பா.ஜ.,வின் சர்ச்சைக்குரிய முகமும், போபால், எம்.பி.,யுமான, பிரக்யா தாக்குர், தன் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டபோது, மரபுக்கு மாறாக, சில வார்த்தைகளை கூறி பதவி யேற்றார்.அடுத்து, பா.ஜ., - எம்.பி.,க்கள் உறுதிமொழி எடுத்து முடிக்கும் போது, 'ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே' என, முழங்கினர். அதற்கு, காங்கிரஸ் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில், நேற்று பதவியேற்றுக் கொண்ட


தமிழக, எம்.பி.,க்கள், தங்களது பதிலடியை காட்ட, பரபரப்பு ஏற்பட்டது.முதல் ஆளாக அழைக்கப்பட்ட, திருவள்ளூர், எம்.பி., ஜெயகுமார், உறுதி மொழி வாசகங்களோடு, கூடுதலாக, 'அம்பேத்கர் வாழ்க' என, முழங்கினார்.தொடர்ந்து, டி.ஆர்.பாலு, ராஜா உட்பட சில மூத்த, எம்.பி.,க்களைத் தவிர, மற்றஅனைவருமே, உறுதிமொழியோடு சேர்த்து, வாழ்க கோஷங்களை முழங்கிபதவியேற்க ஆரம்பித்தனர்.
அம்பேத்கர், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின், தீரன் சின்னமலை, தமிழ், தமிழ்நாடு, திராவிடம், ஜனநாயகம், சமத்துவம், மார்க்சிஸம், உழைப்பாளர் ஒற்றுமை என, ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி, 'வாழ்க, வாழ்க' என, முடித்தனர்.இதற்கு, பா.ஜ., -எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள், 'உங்களுக்கு ஒரு சட்டம்; மற்றவர்களுக்கு ஒரு சட்டமா' என, கேட்கவே, சலசலப்பு ஏற்பட்டது.இதையடுத்து, 'உறுதிமொழியைத் தவிர மற்ற வாசகங்கள் அனைத்தும் நீக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனாலும், சபைக் குறிப்பில் இடம்பெறாது என தெரிந்தும், 'வாழ்க வாழ்க' கோஷத்தை, தமிழக,எம்.பி.,க்கள் கைவிடவில்லை.இதற்கிடையே, தி.மு.க., - எம்.பி., கனிமொழிபதவியேற்கும்போது, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே, 'சமஸ்கிருதத்தில் பதவியேற்றுக் கொள்ளுங்களேன்' என, கிண்டலடித்தார்.இப்படி, சில, பா.ஜ., - எம்.பி.,க்கள், தமிழக,எம்.பி.,க்களை தொடர்ந்து வம்பிழுக்கவே, பொறுமை இழந்த, தி.மு.க.,

Advertisement

- எம்.பி.,பழனிமாணிக்கம், 'நீங்கள், வம்பை ஆரம்பித்துவிட்டீர்கள்; நாங்களும் அதை தொடர்வோம்' என, கோபத்துடன் எச்சரிக்கவே, சபையில் சில நிமிடங்களுக்கு சலசலப்பு நிலவியது.

கைகுலுக்கினர்


அடுத்து, அ.தி.மு.க.,வின் ஒரே ஒரு, எம்.பி.,யான, ரவீந்திரநாத்குமார், கடவுளின் பெயரால், உறுதிமொழியை எடுத்துக் கொண்டாலும், அவரும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை குறிப்பிட்டு, 'வாழ்க' என, முழங்கிவிட்டு, 'ஜெய்ஹிந்த், வந்தேமாதரம்' எனக் கூறி முடித்தார்.உடனே, பா.ஜ., அமைச்சர்கள், எம்.பி.,க்கள், ஓடோடி சென்று, அவரை பாராட்டி கை குலுக்கினர்.பெரும்பாலான தமிழக, எம்.பி.,க்கள், 'தமிழ் வாழ்க' எனக் கூறி, தமிழிலேயே பதவியேற்பு உறுதி மொழியை வாசித்த பிறகு, ஆங்கிலத்தில் கையெழுத்துப்போடுவதை, லோக்சபா, டி.வி., திரை காட்டியதை, அவர்கள் அறியாமல் இருந்தது தான், உச்சகட்ட சுவாரஸ்யமாக இருந்தது.- நமது டில்லி நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
23-ஜூன்-201915:29:30 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>ரொம்பவே ஓவராத்தான் துள்ளுது திமுக அல்பத்துக்கு வாழ்வினு வந்துட்டாப்பல கொள்ளையார்க்கூட்டம்

Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
23-ஜூன்-201914:39:05 IST Report Abuse

s.rajagopalanதி மு க எம் பி களால் ஒன்றும் சாதிக்க முடிய போவதில்லை. ராகுல் பிரதராவது உறுதி என்று முடிவுகள் வர மூன்று நாட்களுக்கு முன்னதாக கூட ஸ்டாலின் மார் தட்டினார். பார்லி'யில் நாட்டாமை செலுத்தலாம் என்ற கனவில் இருந்தார். பஸ் வண்ணமாக போய்விட்டது. இனி இப்படி ஏதாவது செய்தால்தான் அவர்களை யாராவது திரும்பி பார்ப்பார்கள்

Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜூன்-201908:11:57 IST Report Abuse

தமிழவேல் கையெழுத்தையும் தலை எழுத்தையும் மாற்ற முடியாதுன்னு தோணலியா ?

Rate this:
மேலும் 56 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X