பீகாரில் மூளைக்காய்ச்சல் பலி: முதல்வர் மீது பொதுநல வழக்கு

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (6)
Advertisement

PIL,Nitish Kumar,109 Deaths,Muzaffarpur

பாட்னா : பீகாரில் Acute Encephalitis Syndrome எனப்படும் மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. இதில் முஷாபர்நகர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 83 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் மூளைக்காய்ச்சலுக்கு குழந்தைகள் பலியான சம்பவத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள்பாண்டே, மத்திய சுகதாரம் மற்றும் குடும்பல அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இணை அமைச்சர் அஸ்வினி சவுபே உள்ளிட்டோர் மீது பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 26-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.


ஹர்ஷ்வர்தன், நிதிஷ் ஆய்வு:

முன்னதாக முஷாபர்நகர் மருத்துவமனையில் மேலும் 290 குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றனர். பருவமழை இல்லாத நிலையில் இந்த நோய் குழந்தைகள் இடையே பரவியதாக கூறப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முஷாபர்நகர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

தொடர்ந்து முதல்வர் நிதிஷ்குமார் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் போதிய மருந்து மாத்திரைகளை இருப்பு வைக்கவும் உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூன்-201910:51:13 IST Report Abuse
ருத்ரா மழை காலத்தில் டெங்கு மலேரியா வெயில் காலத்தில் மூளைக்காய்ச்சல் சரும நோய் அதிகமாக தாக்கும் என்று தெரியாதா? முன் கூட்டியே அவசிய அவசர மருந்துகள் கைவசம் வைத்திருந்தால் இழப்பை தவிர்த்து இருக்கலாம். மக்களுக்கு சுற்றுப்புற சுகாதார விழிப்புணர்வு தரலாம்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-ஜூன்-201908:24:05 IST Report Abuse
ஆரூர் ரங் இது டாக்டர்கள் பிரச்சனையோ மருத்துவமனைப் பிரச்சனையோ கிடையாது. பொதுசுகாதாரம் பற்றிய பிரச்னை. ஊட்டச்சத்துக்குறைவால் எவ்வளவுதான் மருந்து மாத்திரை மருத்துவ வசதிகள் இருந்தாலும் நோய்த்தொற்று எளிதாக வருகிறது சமவிகித உணவு கொடுக்கும் பழக்கம் பெற்றோரிடையே குறைந்து வருகிறது பலர் நினைப்பதுபோல சமவிகித உணவு அவ்வளவு செலவு பிடிக்கக்கூடியதல்ல சாதாரண கீரை பழங்களிலேயே அனைத்து சத்துக்களும் உள்ளன. (பலர் நினைப்பதுபோல குழந்தைகளுக்கு பசும்பால் தாவர உணவுகள்போல அவ்வளவு உயர்ந்ததல்ல அது சுயநல வெள்ளையர் புகுத்திய மூடநம்பிக்கை) சுகாதாரம் பற்றிய மூடநம்பிக்கைகள் நம் தமிழகத்திலேயே அதிகமிருக்கும்போது பிஹாரைக் கிண்டல் செய்யேவேண்டாமே
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-ஜூன்-201908:18:14 IST Report Abuse
ஆரூர் ரங் இனி பிஹாரிகளுக்கு மூளையே இல்லை என எவரும் எழுதமுடியாது மூளையிருப்பதால்தானே மூளைக்காய்ச்சல் வருகிறது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X