அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.40 லட்சத்தில் ரேஷன் கடைகள்

Added : ஜூன் 19, 2019
Share
Advertisement

தரமணி : தரமணி பகுதியில், 40 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு ரேஷன் கடைகள் கட்டப்பட உள்ளன.அடையாறு மண்டலம், 180வது வார்டு, தரமணி, காமராஜர் நகர், 1வது தெருவில், இரண்டு ரேஷன் கடைகள் உள்ளன.இடப்பற்றாக்குறை காரணமாக, ரேஷன் பொருட்களை பாதுகாப்பதில், ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதே பகுதி, வள்ளுவர் நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான, ஒரு காலி இடம் உள்ளது.இதில், ரேஷன் கடை கட்ட, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 2,400 சதுர அடி பரப்பளவில், இரண்டு கடைகள் கட்டப்பட உள்ளன.அடுத்த மாதம், பணி துவங்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X