குஜராத் ராஜ்யசபா இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement
குஜராத், ராஜ்யசபா, இடைத்தேர்தல், காங்., மனு,  விசாரணை

புதுடில்லி, : குஜராத்தில் காலியாக உள்ள, இரண்டு ராஜ்யசபா தொகுதிகளுக்கு, தனித் தனியாக தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, காங்., வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை, விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் வென்றதால், குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.பி., பதவியை, பா.ஜ., தலைவர், அமித் ஷா மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர்,ஸ்மிருதி இரானி ராஜினாமா செய்தனர்.'இந்த இரண்டு ராஜ்ய சபா, எம்.பி., பதவிகளுக்கு, ஜூலை, 5ல் தனித் தனியாக இடைத் தேர்தல் நடத்தப்படும்' என, தேர்தல் ஆணையம், சமீபத்தில் அறிவித்துஇருந்தது. இதை எதிர்த்து, காங்.,கைச் சேர்ந்த, குஜராத் எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ்பாய் தமானி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.






மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் அரசியல் சாசனத்தின்படி, ஒரு மாநிலத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.இது, ராஜ்யசபாவுக்கும் பொருந்தும்.ஆனால், குஜராத்தில் காலியாக உள்ள, இரண்டு ராஜ்யசபா, எம்.பி., பதவிகளுக்கு தனித் தனியாக தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்தத் தேர்தல் நடந்தாலும், தனித் தனியாக நடத்தப்படுவதால், பெரும்பான்மை பலம் உள்ள கட்சிக்கே அது சாதகமாக இருக்கும்.

குஜராத் சட்டசபையில், மொத்தமுள்ள, 182 தொகுதிகளில், பா.ஜ., வுக்கு, 100, எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். எங்கள் கட்சிக்கு, 75, எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்; ஏழு இடங்கள் காலியாக உள்ளன. இந்த இரண்டு ராஜ்ய சபா எம்.பி., பதவிகளுக்கும் தனித் தனியாக தேர்தல் நடந்தால், அந்த இரண்டிலும் வெற்றி பெற, பா.ஜ.,வுக்கே அதிக வாய்ப்பு உள்ளது. அதனால், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, தனித் தனியாக தேர்தல் நடத்தும் உத்தரவை,தேர்தல் ஆணையம் பிறப்பித்து உள்ளது. இந்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள், தீபக் குப்தா, சூர்ய காந்த் அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின், கோடை விடுமுறை கால அமர்வு, காங்கிரஸ் மனு குறித்து பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-ஜூன்-201908:47:45 IST Report Abuse
ஆரூர் ரங் கான்கிராஸ் ஆட்சியில் 1994 &2009 என இரண்டு முறை இதேபோன்று தனித்தனியாக தேர்தல் நடத்தவைத்து கான்கிரஸ் வென்றது வரலாறு. அப்போது அதனை காங்கிரஸ் தலைமை நியாயப்படுத்தியது டெல்லி ஹைகோர்ட்டும் எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நிராகரித்து அத்தேர்தலை அங்கீகரித்தது .தனக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X