அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம்; புறக்கணித்தார் மம்தா

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (28)
Advertisement

புதுடில்லி : டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இன்று(ஜூன் 19) நடைபெறும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில், பங்கேற்க போவதில்லை என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.






லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், எம்.பி.,க்களை உடைய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இக்கூட்டம், டில்லியில் இன்று நடைபெறுகிறது. இதில், பார்லி., மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, 2022ல் நடைபெறும், 75வது சுதந்திர தின விழா, இவ்வாண்டு நடைபெறும், மாகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாள் விழா உட்பட, பல்வேறு விவகாரங்கள் குறித்து, விவாதிக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக, 'இன்று நடைபெறும் கூட்டத்தில், தான் பங்கேற்க வில்லை' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.





இது குறித்து, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு, அவர் எழுதிய கடிதத்தில், குறிப்பிட்டுள்ளதாவது: பார்லி., மற்றும் சட்ட சபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, உடனடியாக எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. அதுபற்றி, அரசியல் சாசன நிபுணர்கள், தேர்தல் நிபுணர்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்த பிறகே, முடிவு செய்ய முடியும். எனவே, அது பற்றி அவசரமாக முடிவு எடுக்காமல், அனைத்துக் கட்சிகளுக்கும், மத்திய அரசு வெள்ளை அறிக்கை தர வேண்டும். அது குறித்து, கட்சிகளின் கருத்தை அறிந்த பிறகு, ஒரு முடிவுக்கு வருவதே, சரியாக இருக்கும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
20-ஜூன்-201908:18:14 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இந்தம்மா சுடாலின் கனிமொழி போல் பலருக்கும் அகம்பாவம் தான் சத்ரு அதாலேதான் அழிஞ்சுபோவாங்க விலாசம் இல்லாதைக்கு
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-ஜூன்-201915:08:43 IST Report Abuse
இந்தியன் kumar இவரை மக்கள் புறக்கணிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
19-ஜூன்-201912:35:27 IST Report Abuse
vbs manian இவரது நடவடிக்கை சிறுபிள்ளைதனமாக உள்ளது. இவரது தனிப்பட்ட பிரச்சினை இல்லை. மேற்கு வங்கத்தின் தேவை பிரச்சினைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். தனி ஒருவர் ஈகோவால் மாநிலம் நஷ்டம் அடைய கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X