பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது?

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (20)
Advertisement

சென்னை: தண்ணீர் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்து வருவதாலும், காய்கறிகளின் விலையேற்றத்தாலும், ஓட்டல் உரிமையாளர்கள், உணவு பண்டங்களின், விலையை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.






தமிழகத்தில், பல மாவட்டங்களில், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஓட்டல்களில் உணவு சமைக்கவும், குடிநீர் வழங்கவும், பாத்திரங்களை கழுவவும், அதிக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால், ஓட்டல்களும் பாதிக்கப்பட்டுள்ளன.





தண்ணீருக்கான செலவு, வழக்கத்தை விட, 30 சதவீதம் மேல் அதிகரித்துள்ளது. அதனால், பல ஓட்டல்களில், தண்ணீர் அதிகம் தேவைப்படக்கூடிய, சாப்பாடு வகைகள் நிறுத்தப்பட்டன. மேலும், 'கேன் வாட்டர்' விலையும், காய்கறிகளின் விலையும், பலமடங்கு உயர்ந்து விட்டன. இதனால், கூடுதல் செலவை சமாளிக்க முடியாததால், பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், வியாபார போட்டியால், வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாத, பல ஓட்டல் உரிமையாளர்கள், தண்ணீரால் ஏற்படும் கூடுதல் செலவை சமாளிக்க, உணவு பண்டங்கள் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
19-ஜூன்-201911:58:40 IST Report Abuse
Ramesh Sargam ஆனால் தொழிலாளர்களின் சம்பளம் மட்டும் உயர்வதில்லையே என்ன கொடுமைடா இது
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
19-ஜூன்-201911:04:08 IST Report Abuse
தாண்டவக்கோன் "ஓட்டல்ல சாப்டாம ஊட்டுல சமச்சி சாப்ட்டா விலை ஏற்றம் யாரையும் பாதிக்காது". நிம்மி அம்மையார் சொன்னத follow பண்ணனும்.
Rate this:
Share this comment
Cancel
Swami Sivaraman - Chennai,இந்தியா
19-ஜூன்-201910:51:38 IST Report Abuse
Swami Sivaraman இந்திய வர்த்தகம், தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எப்படா கிடைக்கும் நேரம், விலையை உயர்த்தலாம் என்பது. பணக்கார முதலைகள் மென் மேலும் பணம் சேர்ப்பதற்கு. பொதுமக்கள் படும் கஷ்டத்தில் தமது லாபத்தினை என்றாவது குறைத்துக்கொண்டு இருக்கிறார்களா ? எல்லாம் கூ ட்டுகக் கொள்ளைதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X