பொது செய்தி

தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று வெயில் தாக்கும்

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (5)
Advertisement

சென்னை: 'தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று(ஜூன் 19) வெப்ப அலைகளின் தாக்கம் இருக்கும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கமும், தண்ணீர் பற்றாக்குறையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மழை எப்போது வரும் என அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் எதிர்பார்த்துள்ளனர். தென் மேற்கு பருவமழை துவங்கினாலும் ஒரு வாரம் மட்டுமே தென் மாவட்டங்களில் பெய்தது. அரபிக் கடலில் 'வாயு' புயல் உருவானதால், தென் மேற்கு பருவமழை நின்று விட்டது. தற்போது வாயு புயல், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, குஜராத்தில் கரை கடந்துள்ளது.





இதையடுத்து அரபிக் கடலில், தென் மேற்கு பருவகாற்று மீண்டும் வலுவடைவதால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இரு தினங்களில் மழை தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. இன்று மாநிலத்தின் சில இடங்களில் லேசான வெப்ப சலன மழைக்கு மட்டும் வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. இதற்கிடையில் மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து வருகிறது.

சென்னை, வேலுார், திருவள்ளூர், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம், நாகை, அரியலுார், பெரம்பலுார், கரூர், திருச்சி ஆகிய 13 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று வெப்ப அலைகளின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
19-ஜூன்-201909:28:12 IST Report Abuse
GMM இந்த 13 மாவட்டத்தில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயர, மழை நீர் சேகரிப்பை ஏரி, குளம்....பராமரித்து உறுதி செய்ய வேண்டும். காலி இடங்களில் மரம் நட வேண்டும். ஆவின் பால் போன்று சுத்திகரித்து குடிநீர் மக்களுக்கு குறைந்த விலையில் கேன்களில் வழங்க வேண்டும். சாக்கடை நீரை சுத்திகரித்து, வீட்டு உபயோகத்திற்கு குழாய் மூலம் வழங்க வேண்டும். லாரிகள் மூலம் நீர் வழங்கல் குறைய வேண்டும். முன்பு நெருக்கடியில் MGR ரயில் மூலம் AP இருந்து கொண்டு வந்த தண்ணீர் நிறுத்தி பல ஆண்டுகள் ஆகின்றன. செயற்கை மழை, கடல் நீர் சுத்திகரிப்பு கைவிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
SREE -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201908:46:55 IST Report Abuse
SREE தற்பொழுதைய தமிழகத்திற்கு இது மிகவும் தேவையானதுதான்....
Rate this:
Share this comment
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
19-ஜூன்-201908:38:01 IST Report Abuse
sundarsvpr காடுகளை அழித்தோம். பூமியை பிளந்து குழாய் பதித்தோம். நீர்நிலைகளில் கட்டடங்கள் கட்டினோம். இவ்வளவு சௌகரியம் அனுபவித்துவிட்டு வெய்யில் அடிக்கிறது மழை பெய்யவில்லை என்று கதறுவது நியாயமா? மழை பெய்திட பிரார்த்தனை செய்தால் அதனை விமர்சனை செய்வது என்ன நியாயம்? ஊர்ந்து செல்லும் பாம்பை சீண்டினால் படமெடுக்கிறது. இது இறைவன் கொடுத்த பாதுகாப்பு. இதுபோல் இயற்கையை சீண்டினால்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X