பொது செய்தி

இந்தியா

பொருளாதார நிபுணர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement

புதுடில்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக வரும் 22ம் தேதி பொருளாதார நிபுணர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.



latest tamil news





குறைவு:


புள்ளி விவரங்களின்படி, நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் கடைசி 3 மாதங்களில் 5.8 சதவீதம் சரிந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவீதம் சரிந்துள்ளது. இவை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாதது. வேலைவாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாகவும் உள்ளது.


latest tamil news




இந்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, பொருளாதார நிபுணர்கள் கூட்டத்திற்கு, நிடி ஆயோக் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டத்தில், நிடி ஆயோக் அதிகாரிகள், அமைச்சர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். ஜூலை 5ம் தேதி, தனது முதல் பட்ஜெட்டை நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
19-ஜூன்-201910:53:18 IST Report Abuse
sundarsvpr பொருளாதார நிபுணர்களை டெல்லிக்கு அழைத்து பேசுவது திட்டம் செயல்படுத்தும் மட்டும். அதற்கு முன் உடல் உழைப்பை நம்பி உற்பத்தியை பெருக்கும் கிராமங்களுக்கு சென்று கருத்தினை பெறவேண்டும். அவர்கள் வாழ்வாதாரம் உயரவேண்டும். இல்லையெனில் எந்த திட்டங்களும் எதிர்பார்த்த பலனை தராது. கிராம தொழில் வளர்ச்சி முதல் இடம். அதாவது விவசாயம் நீர்நிலை பராமரிப்பு . நிர்வாகம் பட்டி தொட்டியிலிருந்து டெல்லி செல்லவேண்டும்
Rate this:
Share this comment
Naren - Chennai,இந்தியா
19-ஜூன்-201911:49:47 IST Report Abuse
Narenமிக அருமையான கருத்து... இதை அவர்கள் கண்களுக்கு படும் வரை இது போன்ற ஊடகங்களிலும், mygov aap லும் தொடர்ந்து பதியுங்கள்... நானும் எழுதுகிறேன்... இதை படிக்கும் மற்ற நண்பர்களும் இது போன்ற விழிப்புணர்வை மத்திய மாநில அரசுகளுக்கு கொண்டு வர முயலுங்கள்.....
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
19-ஜூன்-201910:21:03 IST Report Abuse
தாண்டவக்கோன் டீயி விலையாவது கொறையுமா🤔🤔🤔
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
19-ஜூன்-201909:47:21 IST Report Abuse
Rengaraj இங்கு வேலை இல்லா திண்டாட்டம் என்பது இல்லை. வேலைக்கு தகுந்த சம்பளம் தருவதுதான் பிரச்சினையே குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்க்க ஆட்கள் வருவது இல்லை. வியாபார போட்டி உலகில் செலவினங்களை குறைத்தால் தான் லாபம் பார்க்க முடியும் என்ற நிலை. அதனால் சம்பள உயர்வு இல்லாமல் நிறைய தொழிலாளர்கள், வேலையாட்கள் தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதில்லை. அது வேலையில்லாத நிலை என்ற வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. புதிய பட்டதாரிகள், அனுபம் இல்லாதவர்கள் சம்பளத்தை பற்றி கவலை கொள்ளாமல் அந்த வெற்றிடத்தை ஓரளவு நிரப்புகிறார்கள். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அந்த நிறுவனம் புதிய ஊழியர்களுடன் போட்டியை சமாளிக்கிறது. வியாபாரம் தாக்குப்பிடித்தால் அந்த ஊழியர்கள் நிற்கிறார்கள். டீக்கடை முதல் அமேசான் ஆன்லைன் வணிகம் வரை இதுதான் இன்றைய வணிக உலகின் யதார்த்தம்.
Rate this:
Share this comment
Naren - Chennai,இந்தியா
19-ஜூன்-201912:06:15 IST Report Abuse
Narenநீங்கள் சொல்வது ஓரளவு சரிதான் என்றாலும் படித்த படிப்பிற்கு வேலை என்பதிலும் திண்டாட்டம் உள்ளது... நீங்கள் சொல்லும் குறைந்த சம்பளத்துக்கு வரும் புதியவர்கள் வாய்ப்புகளை தேடி வந்தவர்களாக இருப்பார்கள்... ஆனால் இது மிகக் குறைவே......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X