பா.ஜ.,வில் இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு: கட்சியிலும், ஆட்சியிலும் 'புது ரத்தம்'

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 பா.ஜ.,  இளம் தலைவர், வாய்ப்பு,  கட்சி, ஆட்சி, புது ரத்தம்

புதுடில்லி: பா.ஜ.,வில் வயது முதிர்ந்த தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு, அரசு மற்றும் கட்சி பதவிகளில் இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

பா.ஜ.,வில் அனுபவம் மிக்க வயது முதிர்ந்த தலைவர்கள் பலர் உள்ளனர். எனினும், கட்சி மற்றும் அரசின் முக்கிய பதவிகளில் இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டு வருகிறது. தேர்தலில், 'சீட்' தருவது, அமைச்சரவையில் இடம் அளிப்பது போன்ற விஷயங்களிலும், வயது ஒரு முக்கிய காரணியாக உள்ளது. கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும் வயதில் இளையவர் தான். தற்போது செயல் தலைவராக, 58 வயது ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமித்ஷாவின் பதவிக்காலம், வரும் ஜனவரியில் முடிந்த பின், கட்சியின் தேசிய தலைவராக நட்டா நியமிக்கப்பட உள்ளார்.


இது ஒருபுறம் இருக்க, லோக்சபா சபாநாயகர் பதவிக்கும், இளம் தலைவரை தேர்வு செய்துள்ளது பா.ஜ., தலைமை. வழக்கமாக, சபாநாயகர் என்றால், பல முறை எம்.பி.,யாக தேர்வு பெற்றவர், வயது முதிர்ந்தவர், பழுத்த அரசியல்வாதி என்ற, பல நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. இதற்கு முன், சபாநாயகராக இருந்த சுமித்ரா மகாஜனுக்கு, 76 வயதாகிறது. இதனால், அவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.


தற்போதைய லோக்சபாவின் சபாநாயகர் வேட்பாளராக பா.ஜ., சார்பில், ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இவருக்கு வயது 56 மட்டுமே. இரண்டாவது முறையாக தான் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ல் தான், முதல் முறையாக லோக்சபாவுக்கு தேர்வானார். அவரை விட வயதிலும், அனுபவத்திலும் ஜாம்பவான்கள் பலர் இருக்க, பிர்லாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


ராஜஸ்தானின் பாலைவனப்பகுதிகள் அதிகம் கொண்ட கோட்டா லோக்சபா தொகுதியில் இருந்து ஓம் பிர்லா வெற்றி பெற்றுள்ளார். இவரது தேர்வுக்கு, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட அதிருப்தி தெரிவிக்கவில்லை. இவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவும் காங்., முன்வராது என்றே கூறப்படுகிறது.'பா.ஜ.,வில் ஏற்பட்டுள்ள தலைமுறை மாற்றம் தான், ஓம் பிர்லாவை சபாநாயகராக தேர்வு செய்ய காரணம். பல புதுமுகங்கள், இளம் எம்.பி.,க்கள் மத்தியில் அமைச்சராகியுள்ளனர். இது கட்சியிலும், ஆட்சியிலும் புது ரத்தம் பாய்ச்ச உதவும்' என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-ஜூன்-201910:31:36 IST Report Abuse
இந்தியன் kumar நல்லவர்கள் வாழட்டும்.
Rate this:
Share this comment
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
19-ஜூன்-201910:28:22 IST Report Abuse
sundarsvpr விடுதலை சிறுத்தை கட்சி ம.தி மு க திராவிட கழகம் இந்த கட்சிகளில் இளையர்கள் தேடுவதில் அருத்தம் இல்லை. முறையே திருமாவளவன் வை கோபால்சாமி வீரமணி இவர்கள் தவிர வேறு தகுதியான நபர் இல்லை. தி மு க வில் சில நிரந்தர நபர்கள் ஆயுள்காலம் வரை பதவி பெறுபவர்கள். இந்த கட்சியில் தான் seniors ஒதுங்கி இளைஞர்களுக்கு வழி விடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
19-ஜூன்-201909:41:02 IST Report Abuse
Nallappan Kannan Nallappan YOU WANT TO CLEAN YOUR BRAIN AND CHECK WITH POLITICAL DICTIONARY THEN YOU WILL KNOW
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X