சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்துகளில் நுாதன மோசடி செய்தவர் கைது

Added : ஜூன் 19, 2019
Share
Advertisement

திருநெல்வேலி:நெல்லையில் விபத்தில் இறப்பவர்களின் வீடுகளுக்கு சென்று நிவாரணம் வாங்கித்தருவதாக பணமோசடி செய்தவரை போலீசார் கைதுசெய்தனர்.சேலம், ஏற்காட்டை சேர்ந்தவர் பிரபாகன் 32. திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் இறப்பவர்கள் குறித்து பத்திரிகைகளில் வெளியாகும் செய்தியை அறிந்துகொண்டு அவர்களது வீட்டிற்கு செல்வார்.தாம் அரசு அதிகாரி எனவும் விபத்து நஷ்டஈடாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கித்தருவதாகவும் அதற்கு செலவுத்தொகையை பெறுவதற்கு முன்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் தருமாறும்கேட்டு வாங்கிக்கொள்வார்.இவ்வாறு 15க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். மூலைக்கரைப்பட்டியில் வேலம்மாள் என்பவரது ஆடுகள் இறந்தன. அவரிடம் நஷ்டஈடு பெற்றுத்தருவதாக கூறி 5 ஆயிரத்து 500 ரூபாய் பெற்றுள்ளார்.நேற்று பிரபாகரனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X