பொது செய்தி

தமிழ்நாடு

1.90 லட்சம் கோடி கன அடி மீத்தேன்: இந்திய கடற்பகுதியில் கண்டுபிடிப்பு

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (47)
Advertisement
மீத்தேன், இந்திய கடற்பகுதி, கண்டுபிடிப்பு

சென்னை : இந்திய கடற்பகுதியில், 1.90 லட்சம் கோடி கன அடி அளவுக்கு, மீத்தேன் எரிவாயு இருப்பதை, சென்னை, ஐ.ஐ.டி., கண்டுபிடித்துள்ளது. இது, தற்போது இந்தியாவில் உள்ள மீத்தேன் வாயுவின் அளவை விட, மூன்று மடங்கு அதிகம்.

கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆற்றங்கரை பகுதியில், அதிக அளவுக்கு மீத்தேன் இருப்பதாக, மத்திய புவி அறிவியல் துறை ஏற்கனவே கண்டறிந்துள்ளது. அந்த இடங்களில், மீத்தேன் வாயுவை எடுப்பதில் சிக்கல் உள்ளது.






இந்நிலையில், சென்னை, ஐ.ஐ.டி.,யின் கடலியல் இன்ஜினியரிங் மாணவர்கள், பவன் குப்தா, விஷ்ணு மற்றும் பெட்ரோலியம் இன்ஜினியரிங் துறை பேராசிரியர், ஜிதேந்திர சங்வய் ஆகியோரது குழு, இந்திய கடற்பகுதிகளில், பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வில், இந்தியாவின் பொருளாதார ரீதியான கடல் எல்லைக்குள், ஆழ் கடலில், வாயு படிமங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது. இந்த படிமங்களை அளவிட்டதில், 1.90 லட்சம் கோடி கன அடி மீத்தேன், அவற்றில் எடுக்க முடியும் என, ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

இது, தற்போது, இந்தியாவில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள, மீத்தேன் அளவை விட, மூன்று மடங்கு அதிகம் என, சென்னை, ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.வெப்ப அழுத்தம், கடலுக்கடியில் படிமங்களின் மீது அழுத்தம் கொடுப்பது, ரசாயனத்தை புகுத்தி எடுப்பது, கார்பன் டை ஆக்சைடு மற்றும் பாலிமர் பயன்படுத்தியும், மீத்தேன் வாயுவை எடுக்கலாம் என, ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22-ஜூன்-201903:55:53 IST Report Abuse
 nicolethomson ரெடி ஸ்டார்ட் ,
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
21-ஜூன்-201921:00:23 IST Report Abuse
ரத்தினம் எரிவாயு எடுக்க வேண்டாம் ன்னா விறகு அடுப்புக்கு போகணும். காட்டை அழிக்கணும். வரும் காலங்களில் எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாட்டுக்காரன் , அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலிய எல்லாரும் சேர்ந்து நமக்கு எண்ணெய், எரிவாயு கொடுக்க மாட்டேன் என்பான் அல்லது அவன் வச்சது தான் விலை என்று ஆகும். அப்போ இந்தியாவே அல்லோகலப்படும். நமது நாட்டின் வளங்களையும் எடுக்க முயற்சி செய்ய வேண்டும். மாற்று எரிபொருள்களை கண்டு பிடிக்க வேண்டும். அதே நேரத்தில் பசுமை கள் பாதுகாக்கப்பட வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக கட்டாய குடும்பக்கட்டுப்பாடு விதித்து மக்கள் தொகையை குறைக்க வேண்டும்.
Rate this:
Share this comment
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
22-ஜூன்-201907:26:36 IST Report Abuse
TAMILANஇரண்டில் அதாவது ஒன்றை தான் செய்ய முடியும் கண்டிப்பாக இயற்கை பாதிக்கப்படும். இந்திய அரசியல்வாதிகள் அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா போல் அல்ல . எல்ல்லாவற்றையும் தனக்காக எடுத்து சுவிஸ் வங்கியில் போட்டு கொள்வார்கள். மக்கள் பிச்சேய் எடுப்பார்கள்....
Rate this:
Share this comment
Visu - chennai,இந்தியா
22-ஜூன்-201914:03:14 IST Report Abuse
Visuமிக சரியாக சொன்னீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
Selva - CHENNAI,இந்தியா
21-ஜூன்-201919:43:36 IST Report Abuse
Selva மீத்தேனின் என்ற எரிதிறனை எடுத்துக்கொண்டால் அதை Offshore இல் இருந்து எடுக்கும் செலவை ஒப்பிடுகையில் குறைவான பலனையே அளிக்கக் கூடியது. அதிலும் எடுக்கப்படும் வாயுவில் எத்தனை சதவிகிதம் மீத்தேன் என்பதையும் பார்க்க வேண்டும் (தொண்ணூறு சதவிகிதம் மீத்தேன், எஞ்சியவை கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் என்பதாகக் கூட இருக்கலாம்)..எப்படியும் புதிய கடல் சார்த்த ப்ரொஜெக்ட்ஸ் உண்டாகும்,ஆய்வாளர்கள் முதலீட்டாளர்கள்/அரசு இதை வரவு செலவு, என்று பலாபலன்கள் பார்க்காமல் திட்டத்தைத் துவக்கிவிட மாட்டார்கள்-==இந்தியன்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X