உ.பி.பல்கலைகளில் தேசவிரோதிகளுக்கு தடை

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (22)
Advertisement

லக்னோ : உத்தரபிரதேச தனியார் பல்கலைக்கழகங்களில் தேசவிரோத செயல்களை தடை செய்யும் புதிய சட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால், 'தேசவிரோத' என்ற வார்த்தையின் பொருள் விளக்கப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


''தேசபக்தி''


உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்றைய (ஜூன் 19) அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் இந்த அவசரசட்டத்தை அறிவித்துள்ளார். அரசின் செய்திக் குறிப்பில், ''தேசத்தின் இறையாண்மை, மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், சர்வதேச நன்மதிப்பு, நன்னடத்தை மற்றும் தேச பக்தியை வலியுறுத்தும் வகையில் பல்கலைக்கழக வளாகங்கள் செயல்பட இந்த உத்தரபிரதேச தனியார் பல்கலைக்கழக மசோதா-2019 கொண்டு வரப்படுகிறது.


கல்வித்தர மேம்பாடு :


உ.பி.,யின் 27 பல்கலைகழகங்களும் தற்போது பொதுவான சட்டங்களின் அடிப்படையில் இயங்குகின்றன. இதுவரை தனியான சட்டங்கள் இல்லை. இனிமேல், இந்த சட்டம் பல்கலைக்கழகங்களை வழிநடத்தும் என்று உ.பி.,அமைச்சர் சித்தார்த்நாத் சிங் கூறியுள்ளார். மேலும், இது கல்வி செயல்பாடுகளின் தரத்தை மேம்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

50 சதவீத கட்டண தள்ளுபடி :


மேலும், இந்த சட்டம் பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களின் 50 சதவீத கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யவும், பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத ஊழியர்களை நிரந்தரமாக்கவும் வழி செய்வதாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.


நிதிச்செயல்பாடு :

மேலும், இந்த புதிய சட்டம் மாநில அரசு, பல்கலைகழகங்களின் தினசரி நிதிச்செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தவும் உதவும் என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஜூன்-201917:42:54 IST Report Abuse
Endrum Indian மிக மிக சரியான முடிவு/தீர்வு. சனியனுங்க பாகிஸ்தானிய முஸ்லிமுக்கு செய்த கொலைகளுக்கு தண்டனை கொடுத்தால் இது தவறு அது தவறு என்று ஜெ.என்.டி யுவில் கூட்டம் கூடி உளறுவார்களாம். அது இப்போ நின்று விடும் அல்லவா.
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
19-ஜூன்-201915:27:15 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை அந்நிய ஆங்கிலேயருக்கு காவடி தூக்கின கூட்டமெல்லாம் தேச பக்தி பத்தி பேசுற காலக் கொடுமை இந்தியாவுல தான் நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
19-ஜூன்-201914:54:43 IST Report Abuse
Ram Sekar என்ன அர்த்தம் வேணும்பா உங்களுக்கு? என்ன வேணுமின்னா எப்படி வேணுமின்னாலும் பேசுவீங்க, சட்டப்படி புடிச்சி உள்ள தள்ளி நாலு மிதி மிதிச்சா "பேச்சு சுதந்திரம் இல்லை", சகிப்புத்தன்மை இல்லை, அது இல்லை, இது இல்லை. நீங்க பேசுனத்துக்கு நாங்க கண்டனம் தெரிவிச்சால் பிஜேபி-RSS கைக்கூலி அப்படின்னு வேற ஏசுவீங்க. இனி யாராவது சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை அப்படின்னு பீலா உட்டுட்டு வந்தானுங்கன்னு வச்சுக்கோ மக்களே (மானம் ரோஷம் இருக்கற மக்களை சொன்னேன்) வச்சு வச்சு செய்வாங்கோ, செய்வோம். என் நாடு என் மக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X