மோடி உத்தரவை பின்பற்றும் அமைச்சர்கள்

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (8)
Advertisement
மோடி உத்தரவை பின்பற்றும் அமைச்சர்கள்

புதுடில்லி: பிரதமர் மோடி உத்தரவை தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் காலை 9. 30 மணிக்கு அலுவலகம் வருகின்றனர்.


மத்தியில் இரண்டாவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைத்ததும், மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அப்போது, பார்லிமென்ட் தொடர் நடக்கும் நாட்களில், அமைச்சர்கள் வெளிநாடு பயணத்தை தவிர்க்க வேண்டும். வீட்டில் இருந்து பணியாற்றுவதை தவிர்த்துவிட்டு, மத்திய அமைச்சர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தங்கள் அலுவலகம் வர வேண்டும். நமது அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.


இந்த உத்தரவை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் காலை 9.30 மணிக்கு அலுவலகம் வந்துவிடுகின்றனர். மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, காலை 9.30 மணிக்கு அலுவலகம் செல்லும் வகையில், தனது காலை நிகழ்ச்சிகளை மாற்றியமைத்து கொண்டுள்ளார். நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பஸ்வானும் காலை 9.30 மணிக்கே அலுவலகம் வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மத்திய அமைச்சர்கள் ஹர்ஸ்வர்தன், பிரகாஷ் ஜாவேத்கர் ஆகியோர் வழக்கம் போல் காலை 9.30 மணிக்கு அலுவலகம் வந்துவிடுகின்றனர். மத்தியில் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்ற நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், காலை 9. 30 மணிக்கு அலுவலகம் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல்,பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டாவும் காலை 9. 30 மணிக்கு அலுவலகம் வந்துவிடுகிறார். அமைச்சர்கள் காலை 9.30 மணிக்கு அலுவலகம் வருவதை தொடர்ந்து ஊழயர்களும் உரிய நேரத்திற்கு வந்துவிடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-ஜூன்-201916:14:43 IST Report Abuse
இந்தியன் kumar நல்ல தலைவர்கள் அமைந்ததால் நாடும் நல்லதாக மாறும். சுதந்திர இந்தியாவின் ஈடு இணை அற்ற தலைவர் மோடிஜி
Rate this:
Share this comment
Cancel
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-201916:07:14 IST Report Abuse
Niranjan பார்லிமென்ட் தொடர் நடக்கும் நாட்களில், அமைச்சர்கள் வெளிநாடு பயணத்தை தவிர்க்க வேண்டும்: இதை பிரதமரும் கடை பிடிப்பாரா?
Rate this:
Share this comment
Cancel
Srinivas -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201913:43:18 IST Report Abuse
Srinivas புகழு, இங்கேயும் வந்து ஏதாவது புளுகு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X