பொது செய்தி

இந்தியா

பருவமழை தாமதம் ஏன்; பகீர் தகவல்

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (23)
Advertisement

சென்னை : தென்மேற்கு பருவமழை தாமதம் ஏன் என்பது குறித்த பகீர் தகவல்களை வானியலாளர்கள் கூறியுள்ளனர். இன்னும் 4 முதல் 5 நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்றும் ஆறுதலாக தெரிவித்துள்ளனர்.






தாமதம் :


இந்தியாவில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 4 மாதங்களில் பெய்யும் இந்த மழை தான் இந்தியாவின் 70% தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. கேரளத்தில் ஜூன் 1ம் தேதியே பருவமழை தொடங்கிவிடுவது வழக்கம். ஆனால் ஆரம்பத்தில் இந்த மழையானது ஜூன் 6ம் தேதி தான் துவங்கும் என்று நான்கு நாட்கள் தாமதமானது. பின்னர் 6ம் தேதியும் மழை துவங்கவில்லை. மாறாக ஜூன் 8ம் தேதி தான் பருவமழை துவங்கியது.


வறண்ட வானிலை ;

மே 10ம் தேதிக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மழை பெய்யத் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வாயு புயல் தோன்றி சிறிது மழையும் பெய்தது. ஆனால், அதன் பின்னர் ஒரு வார காலமாக பெரிதும் வறண்ட வானிலையே காணப்படுகிறது.





ஜூலை வரை ;

பருவமழை இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஜூன் இறுதி அல்லது ஜூலை ஆரம்பத்தில் தான் பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்த பருவ காலத்தில் இந்தியா முழுவதும் சுமார் 89 செ.மீ வரை மழை பதிவாகும். பல்வேறு இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்வதும் உண்டு. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டில் தான் பருவமழை தீவிரம் அடைய தாமதம் ஏற்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.





வாயு புயலால் தாமதம்?

கடந்த ஆண்டுகளில் இதே நேரத்தில் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் பருவமழை தொடங்கி இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் தற்போது வரை 10 முதல் 15 விழுக்காடு பகுதிகளில் மட்டுமே பருவமழை தொடங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு வாயு புயல் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. காற்றில் இருந்த ஈரப்பதத்தை வாயு புயல் எடுத்துச் சென்றது. பருவமழை தீவிரம் அடைவதை தாமதப்படுத்தி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்னும் நான்கே நாள்...

தென் மேற்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரமடைய 3 முதல் 4 நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதிக்குள் தென்னிந்தியா முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வானியலாளர்கள் கணித்துள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
24-ஜூன்-201903:44:43 IST Report Abuse
meenakshisundaram 'தண்ணீர் 'சம்பந்தமான செயதிகளை சென்சேஷனல் ஆக .திகில் மற்றும் பேய் படங்களை போல வெளி இட வேண்டும் என்று தினமலர் குழுவினருக்கு நிர்வாகம் கட்டளை (?) பிறப்பித்த மாதிரி தெரிகிறது .உண்மையான அறிவுள்ள வாசகனுக்கு இந்த செயதியில் 'பகீர் 'எங்கே இருக்குன்னு தேடுறோம்?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஜூன்-201907:42:20 IST Report Abuse
Pugazh V ஜூன் 8 ஆம் தேதி கூட பருவ மழை கேரளாவில் பெய்யவில்லை. இன்று வரை சொல்லிக்கறா மாதிரி மழையே இல்லை.
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
20-ஜூன்-201919:07:55 IST Report Abuse
 nicolethomsonவேதனையான செய்தி இது இந்த நேரத்தில் நமக்கு 25 சதம் மழை வந்திருக்க வேண்டும் , வரும் காலங்களில் காய்கறிகள் , அரிசி சோறு சாப்பிடுபவர்களுக்கு திண்டாட்டம் ?...
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஜூன்-201903:00:15 IST Report Abuse
meenakshisundaram இல்லே ,உண்மையான காரணம் நாங்க சொல்றோம் ,ஹிந்திக்காரன் தெற்கே வரும் மேகத்தை மந்திரம் சொல்லி தடுத்துட்டான் ,திருவள்ளுவர் அன்றே சொல்லிட்டாரு வானம் பொய்த்திட்டது என்று -அதாவது வானம் பொய் சொல்லுச்சு ,வரேன்னு ஆனா வரல்லே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X