பொது செய்தி

இந்தியா

பிரதமர் கூட்டம்: எதிர்க்கட்சியில் பிளவு

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (23)
Advertisement

புதுடில்லி : 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய மசோதாவை நிறைவேற்ற இன்று அனைத்து கட்சி கூட்டத்தை மோடி கூட்டுகிறார். இதனை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் நிலையில், இடதுசாரிகள் பங்கேற்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.








புறக்கணிப்பு :

இன்று நடைபெற உள்ள கூட்டத்தை ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றனர்.


எதிர்க்கட்சிகளின் கூட்டம் ரத்து

ஆனால், தேசியவாத காங்கிரஸ், மா.கம்யூ., இ.கம்யூ., போன்ற கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எதிர்க்கட்சிகளிடையே இந்த மசோதா குறித்த ஒருமித்த கருத்து எட்டமுடியாத தால் தான் இன்று நடைபெற இருந்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.







இடதுசாரிகள் எதிர்ப்பு?

ஆனால், கூட்டத்தில் பங்கேற்று ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவே மா.கம்யூ., பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், இ.கம்யூ., பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டியும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரும் பங்கேற்க உள்ளதாக டில்லி அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


ஒருமித்த கருத்து இல்லை

இது இந்த விஷயத்தில் பொதுக்கருத்தை எட்டவேண்டும் என்கிற பிரதமர் மோடியின் நல்ல எண்ணத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். ஏனெனில், லோக்சபாவில் பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதுமான பலம் உள்ளது. ராஜ்யசபாவில் கூட முயன்றால் பெரும்பான்மை பெரும் நிலையில் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.


ராஜ்யசபா பலம்?


545 பேர் கொண்ட லோக்சபாவில், தேசிய ஜனநாய கூட்டணி 354இடங்களையும், ராஜ்யசபாவில் மொத்தமுள்ள 254 இடங்களில் பா.ஜ., கூட்டணி 104 இடங்களையும் தற்போது வைத்துள்ளது. விரைவில், பல ராஜ்யசபா இடங்கள் காலியாகும் நிலையில் இன்னும் சில மாதங்களில் ராஜ்யசபாவிலும் பா.ஜ., கூட்டணி பெரும்பான்மை பெற வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
20-ஜூன்-201909:37:01 IST Report Abuse
suresh kumar என்ன செய்ய? பெட்ரோல் விலை கூட்ட நினைத்தாலோ அல்லது ஜன் தன் கணக்கில் காசு போட நினைத்தாலோ, ஏதோ ஒன்று இரண்டு மாநிலத்தில் தேர்தல் அதனால் நினைத்தவுடன் செய்ய முடிவதில்லை. இந்த அக்கப்போரை ஒழிக்கத்தான் ஒரே தேசம் ஒரே தேர்தல் கொண்டுவர முயற்சி.
Rate this:
Share this comment
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
19-ஜூன்-201917:37:30 IST Report Abuse
sankaseshan இந்த கொசு தொல்லை தாங்க முடியலே நாராயன
Rate this:
Share this comment
Cancel
Ramaswami Sampath - mumbai,இந்தியா
19-ஜூன்-201917:26:19 IST Report Abuse
Ramaswami Sampath ஒரு முறை வோட்டு மெஷினில் மோசடி செய்தல் போதும்
Rate this:
Share this comment
KSK - Coimbatore,இந்தியா
19-ஜூன்-201918:53:53 IST Report Abuse
KSKஆம், இப்போது தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் செய்தது மாதிரி, .....?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X