உலக கோப்பை: தவான் விலகல்

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (7)
Advertisement

லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து ஷிகர் தவான் காயம் காரணமாக விலகினார்.





இங்கிலாந்து மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன. இந்திய அணி நான்கு போட்டியில் மூன்று வெற்றி (ஒரு போட்டிக்கு முடிவு இல்லை) பெற்றுள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் துவக்க வீரர் தவான் 8 ரன்கள் மட்டும் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் சதம் விளாசினார். இதில் கம்மின்ஸ் வீசிய 'பவுன்சர்' இவரது இடது கை பெருவிரலை தாக்கியது. 'ஸ்கேன்' செய்ததில், எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவர, அடுத்த இரண்டு போட்டியில் பங்கேற்கவில்லை. இருப்பினும், காயத்திலிருந்து தவான் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.






ரசிகர்கள் ஏமாற்றம் :


இதற்கிடையே, காயம் குணமடையாத காரணத்தால் தவான் உலக கோப்பை தொடரிலிருந்து விலகினார். இவருக்குப்பதில் அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் சேர்க்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடரில் அசத்தும் தவான் அணியில் இல்லாதது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mupaco - Madurai,இந்தியா
19-ஜூன்-201920:19:59 IST Report Abuse
mupaco உலகமே இடது கை மட்டையாளர் மற்றும் பௌலர் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மட்டையாளரையாவது தேர்வு செய்திருக்க வேண்டும். நான்கு பௌலர் கொண்டு விளையாடுவதும் கண்ணுக்கு தெரியவில்லை. தற்போது தான் மூன்று பௌலர் கொண்டு பாண்டியா ஆல் ரவுண்டர் கணக்கில் வந்ததால் நடக்கிறது. அண்மையில் ஒரு போட்டியில் விஜய் கொண்டு நான்கு பௌளராக விளையாடியது தெரியும். இது அரை இறுதியில் தொடர்ந்தால் இறுதியை நினைக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Vincent - chennai  ( Posted via: Dinamalar Windows App )
19-ஜூன்-201920:18:24 IST Report Abuse
Vincent தவான் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி உண்மையே. இந்திய அணி இதுவரை பெற்ற வெற்றிகள் அணியின் அனைத்து வீரர்களின் முழு ஈடுபாட்டின் மூலமாகவே. பா.ஜ., போல. அனைவரின் ஒத்துழைப்பால் முன்னேற்றம். நிச்சயமாக கோப்பையை வெல்லும்.ஜெய்ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X