பொது செய்தி

இந்தியா

விமானிகள் உணவு எடுத்து வர தடை

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (9)
Advertisement

பெங்களூரு : டிபன் பாத்திரத்தை யார் முதலில் கழுவுவது என்பது தொடர்பாக விமானிக்கும், விமான பணிக்குழுவை சேர்ந்தவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், இனி விமான பணியாளர்கள் யாரும் உணவை எடுத்து வரக்கூடாது என ஏர்இந்தியா நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பெங்களூருவில் இருந்து கோல்கத்தாவிற்கு காலை 11.40 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர்இந்தியா விமானத்தின் விமானிக்கும், விமான பணிக்குழுவை சேர்ந்தவருக்கும் இடையே டிபன் பாத்திரத்தை யார் முதலில் கழுவுவது என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக விமானம் புறப்படுவது 2 மணிநேரம் தாமதம் ஆனது.
தனிப்பட்ட மோதல் காரணமாக விமானம் புறப்படுவது தாமதம் ஆனதற்கு ஏர்இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது. அத்துடன், இருவரையும் விரைவில் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஏர்இந்தியா உயரதிகாரி ஒருவர் கூறுகையில், விமாரணைக்கு பிறகு இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு, விரைவில் விமானத்தில் விமானிகள் யாரும் உணவை எடுத்து வரக்கூடாது என்ற தடை உத்தரவு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு முன் மார்ச் மாதம், இதே போன்றதொரு சம்பவத்தால் விமானிகள் யாரும் தங்களுக்கு சிறப்பு உணவை ஆர்டர் செய்யக் கூடாது என ஏர்இந்தியா உத்தரவிட்டிருந்தது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Roy -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201906:20:02 IST Report Abuse
Roy one day there will be a problem regarding first use of toilet, and management will say staffs should not use toilet, foolish act by management, summary dismissal is the only solution
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
19-ஜூன்-201920:10:50 IST Report Abuse
Girija இரண்டுமணி நேரம் விமானம் தாமதமா ? இவர்கள் இருவரையும் ஏர்போர்ட் லவுஞ்ஜ் ரெஸ்டாரண்டில் இரண்டு நாள் பிளேட் மற்றும் காபி கப் கழுவ சொல்லி தண்டனை தர வேண்டும். இன்னோரு கேவலமான விஷயம் இந்தியாவில் தான் ஊழியர் மற்றும் அதிகாரிகள் என்று டாய்லெட்டில் இருந்து பாகுபாடு உள்ளது.
Rate this:
Share this comment
Tiruppur Tamilan - TIRUPPUR,இந்தியா
19-ஜூன்-201920:46:04 IST Report Abuse
Tiruppur Tamilanசரியாக சொன்னீர்கள் சகோதரியே இதனால் தான் இந்தியா இன்னும் முன்னேறவில்லை...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-ஜூன்-201919:12:34 IST Report Abuse
Natarajan Ramanathan நாளை துணி தேய்ப்பதில் தகராறு வந்தால் யூனிபார்ம் போட்டு வரக்கூடாது என்று சொல்வார்களோ? எனது சகோதரர் மகள் ஏர்இந்தியா விமானப்பணிப்பெண் வேலையை ஆறு மாதத்தில் ராஜினாமா செய்ததின் காரணம் இப்போது புரிகிறது.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜூன்-201921:27:53 IST Report Abuse
தமிழ்வேல் சென்ற செப்டம்பரில் வெளிநாட்டுப்பயணத்தின்போது ஏர்இந்தியா பிசினஸ் க்ளாசில் ஒரு 50 வயசு அம்மா (பாட்டி) ஏர் ஹோஸ்டஸ் ஆக இருந்தார் அவர்தானா ? ரொம்பவே என்னை விசாரித்தது.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X