பொது செய்தி

இந்தியா

திரிபுராவில் உபரி மின்சாரம்:நேபாளத்திற்கு விற்பனை

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (5)
Advertisement


அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் உள்ள உபரி மின்சாரம் அண்டை நாடான நேபாளத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. என மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.






இது குறித்து மாநில துணை முதல்வர் ஜிஸ்னு தேவ்வர்மா கூறி இருப்பதாவது: மாநிலத்தில் தற்போது நுகர்வோருக்கு தினமும் 300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மாநிலத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் சவுபாக்யா திட்டத்தின் மூலம் 1.36 லட்சம் புதிய மின் இணைப்புகளை வழங்கி உள்ளது. சூரிய மின்சாரம் தயாரிப்பதில் மாநில அரசு இப்போது முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனை தொடர்ந்து மாநில செயலகம், சட்டமன்றம்,ஐகோர்ட் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களை முழுமையாக சூரிய சக்தியாக மாற்றும் திட்டங்கள் தொடங்கி வருகிறது.




மேலும் அசாம் (240 மெகாவாட்),திரிபுரா (196 மெகாவாட்), மேகாலயா (79 மெகாவாட்), மணிப்பூர் (42 மெகாவாட்), நாகாலாந்து (27 மெகாவாட்) ,அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் (22 மெகாவாட்),ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து 58 சதவீதம் அளவிற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து பல ஆண்டுகளாக 190 மெகாவாட் உபரி மின்சாரத்தை வங்கதேசத்திற்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 40 மெகா வாட் மின்சாரம் நேபாள நாட்டிற்கு விற்பனை செய்ய துவங்கி உள்ளது.
உபரி மின்சாரம் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் மாநில மின் சக்தி நிறுவனத்தை உருவாக்க பயன்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GIRIPRABA - chennai,இந்தியா
20-ஜூன்-201911:36:24 IST Report Abuse
GIRIPRABA முதலில் நாம் செலவிடும் தண்ணீரை சாக்கடைக்குள் அனுப்பாமல் பூமிக்கு அனுப்பினாலே பாதி பிரச்சனை தீரும். வீட்டில் உபயோகமாகும் தண்ணீர் அனைத்தையும் சென்னைவாசிகள் ட்ரைனேஜ்-இல் கனெக்ட் செய்து விடுகிறார்கள் . இதுபோல் இல்லாமல் பூமியில் விழுமாறுதான் நம் முன்னோர்கள் உபயோகபடுத்தினார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
20-ஜூன்-201910:00:43 IST Report Abuse
Chowkidar NandaIndia இங்கெல்லாம் டாஸ்மாக் இல்லை போலிருக்கிறது. ஏனென்றால் இங்குள்ள மக்கள் உழைக்கிறார்கள், சிந்திக்கிறார்கள், செயல்படுத்துகிறார்கள். அதனால் ஒரு சின்ன சந்தேகம்.
Rate this:
Share this comment
Cancel
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
20-ஜூன்-201909:55:38 IST Report Abuse
Sitaraman Munisamy தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் நமக்கே போதவில்லை என்றாலும் கேரளா கர்நாடக ஆந்திரம் பாண்டி போன்ற மாநிலங்களுக்கு விற்கப்படுகிறது. அப்போதுதானே அதிக விலை கொடுத்து வாங்கி மின் பற்றாக்குறையை சரி செய்து கள்ள காட்டமுடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X