எல்லையோர கிராமங்களில் பி.எஸ்.எப்., ஒருங்கிணைப்பு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எல்லையோர கிராமங்களில் பி.எஸ்.எப்., ஒருங்கிணைப்பு கூட்டம்

Added : ஜூன் 19, 2019
Share
எல்லை, கிராமங்களில், பி.எஸ்.எப்., ஒருங்கிணைப்பு, கூட்டம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்உளவுத்துறை , எல்லை பாதுகாப்புபடையினர் மற்றும் எல்லைப்பகுதி கிராம மக்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

எல்லை பகுதியில் உள்ள சம்பா மாவட்டத்தில் ஒருங்கிணைப்பு கூட்டம் உதவிகமாண்டன்ட் அதர்வா ரோஷன் சர்மா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து தப்பிக்க கண்காணிப்பு கோபுரம், பதுங்கு குழி அமைக்க வேண்டும் என கிராம கோரிக்கை விடுத்தனர். எல்லையில் அமைக்கப்பட்ட வேலி வரை விவசாயம் செய்யலாம் என பாதுகாப்பு படை தெரிவித்தது. மேலும் சந்தேகப்படும்படியான நடமாட்டம், நடவடிக்கை குறித்து உடனே எல்லை பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இது போன்ற கூட்டம் புத்தீப், நர்சரி மற்றும் சாக் பகுரா பகுதிகளில் நடத்தப்பட்டு கிராம மக்கள் தங்களது பிரச்னைகளை தெரிவித்ததாக எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X