யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக தத்துவம்...இன்று உலக அகதிகள் தினம்

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக தத்துவம்...இன்று உலக அகதிகள் தினம்

வீடு, உடமை, சொந்த பந்தம், உரிமை என அனைத்தும் இழந்து, ஆதரவின்றி தவிக்கும் அகதிகளுக்கு பலம், தைரியம் மற்றும் விடாமுயற்சியை அளிக்கும் விதத்தில், ஜூன் 20ல் உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

'அகதிகளுடன் செயல்படுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்துவன்முறையால் எதிர்கால
வாழ்க்கைக்கு, கனவுகளை தவிர மற்ற அனைத்தையும் இழந்து, உள்நாட்டிலோ அல்லது நாடு கடந்தோ அகதிகளாக நிற்கின்றனர். இவர்களுக்கு அனைத்து நாடுகளும் உதவ வேண்டும்.

* ஒவ்வொரு அகதியின் குழந்தையும் கல்வி பெற வேண்டும்.

* ஒவ்வொரு அகதி குடும்பமும், ஏதாவது ஒரு இடத்தில் பாதுகாப்பாக வாழ வேண்டும்.

* ஒவ்வொரு அகதியும் வேலை அல்லது புதிய திறன்களை கற்றுக்கொண்டு, தங்களது குடும்பத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். என இத்தினம் வலியுறுத்துகிறது.


யார் அகதிகள்


நிறம், உள்நாட்டு போர், இனம், அரசியல், மதம், வன்முறை, பயங்கரவாதம், வறுமை, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் அகதிகள் உருவாக்கப்படுகின்றனர்.


30

பயங்கரவாதம், போர் அல்லது வன்முறையால் நிமிடத்துக்கு 30 பேர் இருப்பிடத்தை
இழக்கின்றனர்.6.85

உலகளவில் 2017 கணக்கின்படி, 6.85 கோடி பேர், தங்களது இருப்பிடத்தை இழந்துள்ளனர்
என யு.என்.எச்.சி.ஆர்., ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 2.54 கோடி பேர் அகதிகள். 4 கோடி பேர் சொந்த நாட்டுக்குள் இடம் பெயர்ந்துள்ளனர். 31 லட்சம் பேர் தஞ்சம் தேடுவோர்.


6.712018 ஏப்., கணக்கின்படி, மியான்மரை சேர்ந்த 6.71 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள்,
வங்கதேச அகதிகள் முகாமில் உள்ளனர்.


3ல் 2

மூன்று அகதிகளில் இருவர் சிரியா, ஆப்கன், தெற்கு சூடான், மியான்மர், சோமாலியா ஆகிய ஐந்து நாடுகளை சேர்ந்தவர்கள்.


64

அகதிகளாக உள்ள பள்ளி செல்லும் வயதுடைய 64 லட்சம் மாணவர்களில், 29 லட்சம் பேர் மட்டுமே கல்வி பெறுகின்றனர்.


1.20


2016ல் சிரியா உள்நாட்டுப்போரால் 1.20 கோடி பேர் இருப்பிடத்தை இழந்தனர். இது அந்நாட்டின் மக்கள்தொகையில் பாதி.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
20-ஜூன்-201912:06:22 IST Report Abuse
Nallavan Nallavan அகதிகளாக வருபவர்கள் குடியேறும் நாட்டின் நலனைக் கருத்தாமல் அங்கே தீவிரவாதத்தை விதைப்பது நன்றி கெட்டத் தனம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X