ஒரே நாடு, ஒரே தேர்தல் :எதிர்கட்சிகள் எதிர்க்கவில்லை; ராஜ்நாத்சிங்

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (5)
Advertisement

புதுடில்லி : ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை எதிர்கட்சிகள் எதிர்க்கவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறி உள்ளார்.






பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், 'ஒரே நாடு ; ஒரே தேர்தல்' குறித்த அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் புதுடில்லியில் இன்று நடைபெற்றது.





கூட்ட முடிவில் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது: பெரும்பாலான கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தன. அதே நேரத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை அவர்கள் எதிர்க்கவில்லை . மேலும் நாங்கள் 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம், அதில் 21 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர், மேலும் 3 கட்சிகள் இந்த விஷயங்களில் தங்கள் கருத்தை எழுத்துப்பூர்வமாக அனுப்பியுள்ளன என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENNAVAN - CHENNAI,இந்தியா
20-ஜூன்-201912:01:24 IST Report Abuse
THENNAVAN நடுவண் அரசு கொள்ளை அடிக்க மட்டுமே இதுவரை அமைந்ததாக இருந்தது ,இந்த 6 வருடமாகத்தான் செயல்படும் அரசாக உள்ளது வாழ்த்துக்கள் மோடிக்கு.
Rate this:
Share this comment
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
20-ஜூன்-201908:48:14 IST Report Abuse
sundarsvpr ஒரே நேரத்தில் கால பண நிர்வாக சுமையை குறைத்திடவும் அரசு மற்றும் எதிர்கட்சிகளின் செயல்பாட்டினை எடை போடவும் தேர்தலை 5 ஆண்டுகளில் பிரித்து நடத்தலாம் அதாவது ஒட்டுமொத்த தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நடத்துவது சிரமமானது. இடை தேர்தலுக்கு நாள் நட்சத்திரம் பார்க்கவேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
krish - chennai,இந்தியா
20-ஜூன்-201907:40:30 IST Report Abuse
krish வேண்டும் ஒரே தேர்தல், ஒரே நேரத்தில்.......ஒருங்கிணைந்த பாரத நாட்டின் கருத்துக்களை துல்லியமாக பிரதிபலிக்க,,,,,,ஒற்றுமையை ஊக்குவிக்க, மக்களின் வரிப்பண விரயத்தை தவிர்க்க, மக்களை ஒருங்கிணைக்க ....... அதே சமயத்தில் மாநில, மத்திய அரசு நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு, கட்சி தாவல் போன்ற சம்பவங்கள் மூலம் குலையும் பொது, உறுப்பினர் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளின் சார்பை தற்காலிகமாக துறந்து, சுயேச்சை உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அடுத்த தேர்தல் வரும் வரை அவர்களால் ஒரு பொது அமைச்சரவை அமைக்கப்பட்டு ஆட்சி அமைய, தொடர வழி வகை செய்யப்படல் வேண்டும். குறைந்த பட்சம் ஒருவருடம், அவ்வரசு நிரூபணம் ஆன ஊழல் குற்றச்சாட்டு, அரசமைப்பு சட்டம் அவமதிப்பு இல்லாத வரையில் ,நிலைத்து தொடர வாய்ப்பு அமைய வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X