பதிவு செய்த நாள் :
'சபையில் அனைவரது குரலும் ஒலிக்கும்:
புதிய சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி

புதுடில்லி:லோக்சபாவின் புதிய சபாநாயகராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, இரண்டு முறை, எம்.பி., யான, ஓம் பிர்லா, 56, ஒருமனதாக தேர்ந்தெடுக் கப்பட்டார். ''பாரபட்சம் இல்லாமல் செயல்படுவேன்; சபையில் அனைவரது குரலும் ஒலிக்கும்,'' என, அவர் உறுதி அளித்தார்.

புதிதாக அமைந்துள்ள, 17வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. முதல் இரண்டு நாட்களில், அனைத்துக் கட்சி, எம்.பி.,க்களும் பதவிஏற்றனர்.அதைத் தொடர்ந்து, கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான நேற்று, புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடந்தது. இதற்காக வேட்பாளர் பெயரை அறிவிக்க, நேற்று முன்தினம் கடைசி நாளாகும்.


பா.ஜ., தலைமையிலான, மத்தியில் ஆளும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஓம் பிர்லாவின் பெயர் அறிவிக்கப்பட்டது. அவருக்கு, காங்கிரஸ் மற்றும் அதன் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் உட்பட, பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருந்தன.அதைத் தொடர்ந்து,லோக்சபா

கூடியதும், சபாநாயகருக்கான தேர்தல் நடத்தப் படுவதாக, தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் அறிவித்தார்.


வாழ்த்து


ஓம் பிர்லாவை வேட்பாளராக அறிவித்து, பிரதமர் நரேந்திர மோடி அளித்திருந்த தீர்மானம் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது.குரல் ஓட்டெடுப்பில், ஓம் பிர்லா, சபாநாயகராக, ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். சபாநாயகராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள, ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு, மூன்று முறை தேர்ந்து எடுக்கப் பட்டவர். மாணவ பருவத்தில் இருந்தே தீவிர அரசியலில் உள்ளார்.மேலும், சமூகப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். அவரை, சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார், லோக்சபாவின் தலைவரும், பிரதமருமான, நரேந்திர மோடி. அதைத் தொடர்ந்து, மோடி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.காங்., - திரிணமுல் காங்., - பிஜு ஜனதா தளம் - தி.மு.க., உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள், சபாநாயகர் இருக்கைக்கு சென்று, ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆதரவு


பிரதமர் மோடி பேசியதாவது:அரசின் சார்பிலும், ஆளும் தரப்பின் சார்பிலும், முழு ஒத்துழைப்பு

Advertisement

அளிப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். யார் எல்லை மீறினாலும், அது ஆளும் தரப்பாக இருந்தாலும், கண்டிப்புடன் இருக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய உத்தரவை ஏற்றுநடப்போம். இவ்வாறு, அவர் பேசினார்.


காங்கிரஸ் சார்பில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தி.மு.க., சார்பில், டி.ஆர். பாலு, திரிணமுல் காங்., சார்பில், சுதீப் பந்த்யோபாத்யாய் ஆகியோர் பேசினர். 'சபையை சுமுகமாக நடத்துவதற்கு முழு ஆதரவு அளிப்போம். 'மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு, எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தினர்.பதவியேற்ற பிறகு, சபாநாயகர், ஓம் பிர்லா கூறியதாவது:


எந்த பாரபட்சமும் இல்லாமல், அனைத்து உறுப்பினர்களின் நலனையும் பாதுகாக்கும் வகையில் செயல்படுவேன். இங்கு சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நாட்டின் கடைசி குடிமகனுக்கும் பலன் கிடைக்கும் வகையில், உறுப்பினர்கள் பேச வேண்டும். எண்ணிக் கையை கணக்கில் எடுத்து கொள்ளாமல், அனைத்து கட்சியைச் சேர்ந்த, எம்.பி.,க் களுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். அரசும் அவர்களுக்கு பதில் அளிக்கும்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மிகவும் வெளிப் படையான நிர்வாகத்தை அளித்து வருகிறது. சபையில், பா.ஜ., அரசுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களை, பிரதமர் மோடி, மரபுப்படி, லோக்சபாவில் அறிமுகம் செய்து வைத்தார். இதேபோல, நாளை ராஜ்யசபாவில் அவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜூன்-201915:44:45 IST Report Abuse

Endrum Indianஎனக்கு இப்போ பெரி......ய்யய்யய்ய சந்தேகம் ???? ஓம் பிர்லா சபாநாயகர் அவர்களே என்று முஸ்லிம்கள் / கிறித்துவர்கள் சொல்வார்களா???அப்படி முஸ்லிம்கள் சொல்லும் பட்சத்தில் அவர்கள் மீது ஓம் சொன்னதால் பத்வா வருமா???கிறித்துவர்கள் மீது கிறித்துவ சபை நடவடிக்கை எடுக்குமா???இல்லை சல்மான் கான்/ஷாருக் கான் நடிக்கும் படத்தில் இந்துவாக, விஜய் ஜோசப் படத்தில் இந்துவாக நெற்றி நிறைய விபூதி/குங்குமம் பூசி வெறும் நடிப்பு தானே என்று விட்டு விட்ட மாதிரி இதையும் விட்டு விடுவார்களா? எந்த சினிமா முஸ்லீம் நடிகையும் அரைகுறையாக ஆடை உடுத்தினாலும் நிஜ வாழ்க்கையில் புர்கா அணியாமல் இருந்தாலும் அவர்கள் மீது ஒரு பத்வா முசுலீம் இமாம்/ முல்லாக்கள் இது வரை கொடுக்கவில்லை அப்படியே இதையும் விட்டு விடுவார்களா????ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய நமஹ,, ஓம் சரவண பவ, ஓம் கணேஷயா நமஹ????????ஓம், ஓம் , ஓம் .

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
20-ஜூன்-201908:34:23 IST Report Abuse

ஆரூர் ரங்நாம்தான் எம்பிக்கள் நமக்காக உழைக்கப்பிறந்தவர்களென நினைத்து மணிக்கணக்கில் வெயிலில் காய்ந்து ஓட்டுபோடுகிறோம்.நிதர்சனமோ வேறு. தற்போது ஒரே நல்ல விஷயம் .சொத்து சேர்க்கும் ஆசையில்லாத சேவை மனப்பான்மையுடைய பிரதமர் இருக்கிறார் .இருந்தாலும் ஹவாலா மற்றும் கார்பொரேட் ஏஜெண்டுகளை எதிர்த்துக்கொண்டு ஆட்சி செய்வது மஹா மஹா மஹா கடினம் அவர்களை எதிர்த்தால் எதிர்க்கட்சிகளுக்கு பணம்கொடுத்து அமளிசெய்யவைப்பர் அரசு அதிகாரிகளும் மந்திரிகளுக்கு ஒத்துழைக்கமாட்டார்கள் .இது எப்பாடுபட்டாவது ஒழிக்கப்படவேண்டும் வாழ்க ஜனநாயக தர்மம்

Rate this:
Suresh - chennai,இந்தியா
20-ஜூன்-201908:10:21 IST Report Abuse

Sureshரா நா கோவிந்த், வெ நாயுடுவோடு சேர்த்து ஓம் பிர்லா என்ற மூணாவது ரப்பர் ஸ்டாம்ப் ரெடி. மோடிக்கு கிரீன் சிக்னல் கிடைச்சாச்சு. மக்களவையில் இனி நினைச்சது எதுவும் பண்ணலாம்.

Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
20-ஜூன்-201909:11:05 IST Report Abuse

 Muruga Velஇன்னும் அஞ்சு வருஷம் இப்படியே புலம்பு … வேற வழியில்லை .. ...

Rate this:
Suresh - chennai,இந்தியா
20-ஜூன்-201910:43:04 IST Report Abuse

Sureshஅய்யா மு வேல் அவர்களே, டொனால்ட் டிரம்ப் கெட் அவுட் சொல்வதற்குள் தாங்களாகவே கிளம்பி இந்தியா வந்து விடுங்கள். லண்டன் ரூட், ஹாங்காங் ரூட், தோஹா/துபாய் ரூட் என பல வழிகள் உள்ளன. ...

Rate this:
blocked user - blocked,மயோட்
20-ஜூன்-201919:55:20 IST Report Abuse

blocked userடிரம்ப் சுரேஷை துரத்தி விட்ட விரக்தியில் கருத்து போடுகிறார். ...

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X