பொது செய்தி

இந்தியா

நீதித்துறையில் சுதந்திரம் பறிப்பு? தலைமை நீதிபதி ஆதங்கம்

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (6)
Advertisement
நீதித்துறையில் சுதந்திரம் பறிப்பு? தலைமை நீதிபதி ஆதங்கம்

புதுடில்லி,:''நீதிமன்றங்களின் சுதந்திரத்தை பறிக்க முயலும் சக்திகளை எதிர்கொள்ளும் வகையில், நீதி அமைப்புகள் உறுதியுடன் செயல்பட வேண்டும்,'' என, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் கூறினார்.எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின், தலைமை நீதிபதிகளின் மாநாடு, ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்தது. இதில் பங்கேற்ற, நமது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், பேசியதாவது:
சில நேரங்களில், அரசுகள் அல்லது அதிகாரிகள், மக்களை கவருவதற்காக, அரசியல் சாசனம் நிர்ணயித்துள்ள கடமையை மீறும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற அமைப்புகள், அரசியல் சாசனத்தை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டிய கடமை, நீதித் துறைக்கு உள்ளது. இது போன்ற ஜனரஞ்சக அமைப்புகள், மக்களை ஏமாற்றுவதை அனுமதிக்கக் கூடாது. அவர்களிடம் இருந்து, மக்களையும், அரசியல் சாசனத்தையும் காப்பாற்றும் மிகப் பெரிய பொறுப்பு, நீதித் துறைக்கு உள்ளது.அரசியல் அமைப்புகளால் நெருக்கடி வருவதும், அதற்கு பணிந்து போவதும் சில நாடுகளில் நடந்துள்ளதை நாம் பார்த்திருக்கோம். இந்த இடத்தில்தான், நீதித்துறையின் சுதந்திரம் என்ற பேச்சு வருகிறது.இப்போதும், உலகெங்கும் மக்களுக்கு உள்ள இறுதி வாய்ப்பாக, நீதிமன்றங்கள் உள்ளன. நீதித் துறை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். நமக்கு நியாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம்உள்ளது.
அதனால், நீதிமன்றங்கள், இதுபோன்ற அரசியல் அமைப்புகளின் நெருக்கடிக்கு பணியாமல், அரசியல் சாசனத்தை காப்பாற்றும் வகையில், சுதந்திரமாக செயல்பட வேண்டும். இந்த சுதந்திரம் என்பது, ஒருமுறை அளிக்கக் கூடிய மருந்து கிடையாது. அது தொடர்ந்து இருக்க வேண்டிய நடைமுறை.அரசுகள், அதிகாரிகள், அரசியல் கட்சிகளுக்கு அடிபணியாமல், நீதித் துறையின் சுதந்திரத்தை நசுக்க முயலும் அவர்களுடைய முயற்சிகளை முறியடிக்க வேண்டும். தனக்குள்ள சுதந்திரத்தை உணர்ந்து நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். அந்த சுதந்திரம், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.தன்னை வலுவான அமைப்பாக, நீதிமன்றங்கள் உருவாக்கி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
20-ஜூன்-201914:55:59 IST Report Abuse
sundarsvpr தலைமை நீதிபதி கருத்து உலக நாடுகளில் நடந்த கசப்பு நிகழ்ச்சிகளை வைத்து இருக்கும். கசப்பு நிகழ்ச்சிகளிலும் நல்லவை நடக்கும். அமைச்சர் ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்த விரும்புவார். ஆனால் அதிகாரி நிதிநிலை சட்டம் குறிப்பிட்டு இயலாது என்பார். ஆனால் அமைச்சர் தன நிலையில் இருந்து மாறாமல் செயல்படுத்த விரும்புவார். சட்டம் முக்கியமா திட்டம் முக்கியமா? சட்டத்தின் விதியை தளர்த்திக்கொள்ளலாம். திட்டத்தை மாற்ற இயலாது. நீதி மன்றம் நாட்டின் யதார்த்த நிலையை புரிந்து செயல்பட முடியும்
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
20-ஜூன்-201900:53:01 IST Report Abuse
kalyanasundaram he is the troubles d by mainly indian politicians which he indicated indirectly
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan Gurumurti - Boston MA,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-201900:33:11 IST Report Abuse
Balakrishnan Gurumurti இப்போது மோடி சர்க்கார் அந்த முறையில் தான் செயல்படுகிறது. மக்களை ஏமாற்றும் வகையில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற முறை உருவாகியுள்ளது. அதனால்தான் , மக்கள் எதிர்கட்சிகளை பலப்படுத்த வேண்டும். எப்படியென்றால், ஒரு வீட்டில் இருந்து நான்கு வாக்குகள் இருந்தால் இரண்டு வாக்குகள் நீங்கள் விரும்பிய கட்சியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு எதிர் கட்சிக்கு வாக்குஅளியுங்கள் என்பது அறிவுரை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X