பதிவு செய்த நாள் :
நீதித்துறையில் சுதந்திரம் பறிப்பு?
தலைமை நீதிபதி ஆதங்கம்

புதுடில்லி:''நீதிமன்றங்களின் சுதந்திரத்தை பறிக்க முயலும் சக்திகளை எதிர்கொள்ளும் வகையில், நீதி அமைப்புகள் உறுதியுடன் செயல்பட வேண்டும்,'' என, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் கூறினார்.

 நீதித்துறையில்,சுதந்திரம்,பறிப்பு?, தலைமை நீதிபதி,ஆதங்கம்


எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின், தலைமை நீதிபதிகளின் மாநாடு, ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்தது. இதில் பங்கேற்ற, நமது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், பேசியதாவது:


சில நேரங்களில், அரசுகள் அல்லது அதிகாரி கள், மக்களை கவருவதற்காக, அரசியல் சாசனம் நிர்ணயித்துள்ள கடமையை மீறும்

வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற அமைப்புகள், அரசியல் சாசனத்தை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டிய கடமை, நீதித் துறைக்கு உள்ளது.



இது போன்ற ஜனரஞ்சக அமைப்புகள், மக்களை ஏமாற்றுவதை அனுமதிக்கக்கூடாது. அவர்களிடம் இருந்து, மக்களையும், அரசியல் சாசனத்தையும் காப்பாற்றும் மிகப் பெரிய பொறுப்பு, நீதித் துறைக்கு உள்ளது.அரசியல் அமைப்புகளால் நெருக்கடி வருவதும், அதற்கு பணிந்து போவதும் சில நாடுகளில் நடந்துள்ளதை நாம் பார்த்திருக்கோம்.



இந்த இடத்தில்தான், நீதித்துறையின் சுதந்திரம் என்ற பேச்சு வருகிறது.இப்போதும், உலகெங்கும் மக்களுக்கு உள்ள இறுதி வாய்ப்பாக, நீதிமன்றங்கள் உள்ளன.


நீதித் துறை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். நமக்குநியாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.அதனால், நீதி மன்றங்கள், இதுபோன்ற அரசியல் அமைப்புகளின் நெருக்கடிக்கு பணியாமல், அரசியல் சாசனத்தை காப்பாற்றும் வகையில்,சுதந்திரமாக செயல்பட

Advertisement

வேண்டும். இந்த சுதந்திரம் என்பது, ஒருமுறை அளிக்கக் கூடிய மருந்து கிடையாது. அது தொடர்ந்து இருக்க வேண்டிய நடைமுறை. அரசுகள், அதிகாரிகள், அரசியல் கட்சிகளுக்கு அடிபணியாமல், நீதித் துறையின் சுதந்திரத்தை நசுக்க முயலும் அவர்களுடைய முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.


தனக்குள்ள சுதந்திரத்தை உணர்ந்து நீதிமன்றங் கள் செயல்பட வேண்டும். அந்த சுதந்திரம், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.தன்னை வலுவான அமைப்பாக, நீதிமன்றங்கள் உருவாக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
20-ஜூன்-201917:26:09 IST Report Abuse

Girijaஏழை ப சி மற்றும் தியாகி கார்த்தி குடும்பத்திற்கு பெயில் வாங்கி கொடுக்க வாதாடும் வழக்கறிஞர்கள் யார் மணிக்கு கோடி கணக்கில் பீஸ் வாங்கும் வழக்கறிஞர்கள் தான், அதை கொடுப்பதும் நீங்கள் தான், 2 ஜி போல விடுவிப்பதும் நீங்கள் தான், சைனி இடம் மிருந்து 2 ஜி வழக்கில் முன்னேற்றம் பற்றி சுப்ரீம் கோர்ட் அந்த இரண்டு வருடத்தில் அவ்வப்போது ஆய்வு நடத்தி இருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காதே? இது விசாரணை அதிகாரிகளின் மனஉறுதியை பாதிக்காதா? இந்த இரண்டு விஷயத்தில் தொடர்பு உள்ள மூன்று பேரும் இப்போது எம் பி க்கள். பெரியவர் முன்பே ராஜ்ய சபா எம் பி ,

Rate this:
20-ஜூன்-201917:26:01 IST Report Abuse

சரவணன்ஓய்வு பெற்ற பின்னரும் பதவி கிடைக்கும் என்ற நிலை இருப்பதால், அரசியல் கட்சிகளின் கை ஓங்கியுள்ளதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

Rate this:
K.n. Dhasarathan - chennai,இந்தியா
20-ஜூன்-201917:04:19 IST Report Abuse

K.n. Dhasarathanஐயா இப்போதாவது உண்மை வெளி வந்ததே மோடி அரசு நீதி துறையில் தலையிடாதே என்று சொல்லும் தலைமை நீதிபதி இன்னும் உரத்த குரலில் பகிரங்கமாக சொல்லட்டும். அனைத்து நீதிபதிகளும் அவருக்கு ஆதரவு கொடுங்கள். இதைத்தானே எதிர்க்கட்சிகள் பல காலமாக சொல்லி வருகின்றன. இனிமேல் அரசியல் நெருக்கடி வந்தால் பிரஸ் மீட் வைத்து பெயருடன் விலாவாரியாக சொல்லுவேன் என்று அனைவரும் ஒரே குரலில் சொல்லுங்கள். அரசியல் வியாபாரிகளை மக்கள் கண்டுகொள்ளட்டும்

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X