பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
தண்ணீர் தர கர்நாடகா, ஆந்திரா கைவிரிப்பு

தண்ணீர் தர, கர்நாடகா ,ஆந்திர மாநிலங்கள் மறுத்துள்ளதால், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என, தெரிகிறது.

 தண்ணீர் தர ,கர்நாடகா, ஆந்திரா ,கைவிரிப்புதமிழகத்தின் தேவைக்காக, ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். கர்நாடகா, நீர் வழங்கு வதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசால், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவின் உத்தரவின்படி, இம்மாதம், 9.19

டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்கி இருக்க வேண்டும். அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை எனக் கூறி, கர்நாடக அரசு மறுத்து வருகிறது.


ஆனால், கர்நாடக அணைகளில், 22 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.இதேபோல, தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., நீரை, சென்னைக்கு, ஆந்திர அரசு வழங்க வேண்டும். இந்தாண்டு, 2, டி.எம்.சி., நீரை மட்டுமே, ஆந்திர அரசு வழங்கியுள்ளது.'சென்னையின் குடிநீர் தேவைக் காக, மேலும், 2 டி.எம்.சி., நீரை வழங்க வேண்டும்' என, பொதுப்பணித் துறை செயலர் பிரபாகர், நீர் வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ஜெயராமன் ஆகியோர், ஆந்திரா சென்று, அங்குள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.'கண்டலேறு அணையில், போதுமான தண்ணீர்

Advertisement

இல்லாததால், நீர் திறக்க முடியாது' என, ஆந்திர அதிகாரிகள் கூறி விட்டனர்.தண்ணீர் விஷயத்தில், கர்நாடகா - ஆந்திர மாநில அரசுகள் கைவிரித்துள்ளதால், தமிழகத்தில், மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, சென்னையில் பிரச்னை விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளதால், அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Chennai ,இந்தியா
20-ஜூன்-201920:29:59 IST Report Abuse

RajanChennai is getting reduced water supply on nate days. This has resulted in uneven distribution of water to all the residents. Fortunate are few to get water through their pipes. I have a humble suggestion to Metro water authorities- instead of nate day supply of water , let the piped water be supplied once in 3 or 4 days but it need to be full pressure lasting for 5 hours so that everyone will be assured of water.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
20-ஜூன்-201916:14:16 IST Report Abuse

dandyடாஸ்மாக் நாட்டு டொமிழர்களின் நிலை பாரீர் .....20 ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் டாஸ்மாக் நாட்டில் 400 ஏரிகள் இருந்தனவாம் ..இன்று வெறும் 40 ..... மீதிகள் எல்லாம் கட்டுமர சீடர்கள் நிரப்பி flat கட்டி பணம் சேர்த்து விடடார்கள் ..ஆக சாராயத்திற்கும் ..பிரியாணிக்கும் ஒட்டு (செம்மொழி ) போட்டு 5 தடவை கட்டுமரத்தை ஆட்சி செய்ய அனுமதித்த டொமிழர்கள் தண்ணீர் இல்லை என்று சொல்ல கூடாது தாக்கம் எடுத்தால் பக்கத்தில் டாஸ்மாக் கடைக்கு போகலாம்

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
20-ஜூன்-201912:25:56 IST Report Abuse

தமிழ் மைந்தன்அஇஅதிமுக எம்.எல்.ஏக்கள் கேட்டால் உங்க கூட்டாளி காங்கிரஸ் விடவா போகிறது... அப்படியே விட்டாலும்... தமிழகத்தை ஆண்டு வரும் தமிழர் பழனிச்சாமிக்கு நல்ல பெயர் வந்து விடும் என்பதால் உங்க ஊழல் கம்பெனி வேண்டாம் என்றல்லவா சொல்லும்.. கரூர் மணல் எடுக்க உங்க ஆளு அனுமதி கேட்கிறாரே அது போலவே.......அதுவும் உயர்நீதிமன்றத்தில் தடையானை பெற்ற உங்க கட்சியின் அதே நபருடனா ஆட்சியரிடம் மனு கொடுப்பது.. போட்டோ பார்க்கவில்லையா.. புகழ்... ஓ இது உங்க ஊடகங்களின் வராதே..

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X