பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஏரியை தூர் வார  மக்களுக்கு அனுமதி கொடுத்த கலெக்டருக்கு சபாஷ்!

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், பொன்னையா, ஏரியை துார் வார முன்வந்த மக்களுக்கு, உடனடியாக அனுமதி கொடுத்து, 'சபாஷ்' என, மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். அனைத்து மாவட்டகலெக்டர்களும், அவரை பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு,மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் கலெக்டர், பொன்னையா, 2017 மார்ச்சில், கலெக்டராக பொறுப்பேற்றார். அன்று முதல், தன் சிறப்பான பணியால், மக்களை கவர்ந்து வருகிறார்.முதல்வர் தனிப்பிரிவில் இருந்து அனுப்பப்படும், பொதுமக்கள் மனுக்கள் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, மாநில அளவில், முதல்வரிடம் விருது பெற்றுள்ளார்.அரசு திட்டப் பணிகளை, வேகமாக நிறை வேற்றுவதுடன், நீர் நிலைகளை மேம்படுத்துவதில், அதிக அக்கறை காட்டி வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட

வேண்டும் என்பது, மாவட்ட மக்களின், நீண்ட கால கோரிக்கை. பல முறை சட்டசபையில் அறிவிக்கப்பட்டும், நடக்காமல் இருந்தது.
தடுப்பணை

இவர் கலெக்டராக பொறுப்பேற்ற பின், அப்பணிகளை செயல்படுத்த, முக்கியத்துவம் அளித்தார். தற்போது செய்யாற்றின் குறுக்கே, வெங்கச்சேரி; பாலாற்றின் குறுக்கே, ஈசூர், வாயலுார் ஆகிய இடங்களிலும், தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.இப்பணிகள் நிறைவடையும்போது, அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், மக்கள் குடிநீர் தேவையை

பூர்த்தி செய்ய, பெரிதும் உதவியாக இருக்கும்.

குடிமராமத்து திட்டத்தின் கீழ், மாவட்டத்தில், 70 ஏரிகள், 13 கோடி ரூபாய் செலவில் புனரமைக்க பட்டு உள்ளன. நீர்வள, நிலவள திட்டத்தில், 42 ஏரிகள் சீரமைக்கப் பட்டு உள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில், வெள்ளத் தடுப்பு பணிகள்,ரூ. 84 கோடி செலவில் நடந்து வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. அவற்றிலிருந்து பெறப்படும் கார்ப்பரேட் நிதியில், பெரும் தொகை, நீர் நிலைகளை மேம்படுத்த செலவிடப் படுகிறது. 2018ல், 38 கோடி ரூபாய்

மதிப்பில், 36 வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

முக்கியத்துவம்

நீர் நிலைகளை மேம்படுத்த, அதிக முக்கியத்துவம் அளித்து வரும் பொன்னையா, பொதுமக்கள் நீர் நிலைகளை துார் வார முன் வந்து, இவரிடம் அனுமதி கேட்கின்றனர்; உடனுக்குடன் அனுமதி கொடுத்து, அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளார்.காஞ்சிபுரம் நகரில் செல்லும், வேகவதி ஆற்றிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற, நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். ஆற்றில் குடியிருந்தோருக்கு, மாற்று இடம் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

இவரை போல், அனைத்து மாவட்ட கலெக்டர்களும், அதிகாரிகளும், நீர் நிலைகளை மேம்படுத்த, முக்கியத்துவம் அளித்தால், மழை நீரை சேகரித்து, குடிநீர் பிரச்னை வராத நிலையை உருவாக்கலாம்.
- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
20-ஜூன்-201919:57:59 IST Report Abuse

Gopiஅண்ணே காசுபாக்குறவங்களையும் இவரையும் ஒப்பிடக்கூடாது

Rate this:
Shanmuga Vel - Bangalore,இந்தியா
20-ஜூன்-201918:33:55 IST Report Abuse

Shanmuga Vel250 வாங்கி ஒட்டுப் போட்டு விட்டு , எல்லா வேலைகளையும் நாமே செய்து கொள்ள வேண்டும்

Rate this:
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
20-ஜூன்-201918:28:40 IST Report Abuse

Siva Subramaniamநம்முடைய அரசாங்கம் மெத்தனமாக இருக்கும்போது இப்படி எதாவது நடந்தால் தான் உள்ளது.இதற்கும் சொந்தம் கொண்டாட இன்னமும் 2 அல்லது 3 நாட்களில் ஏதாவது அமைச்சர் வருவார்.இதுதான் நடக்கும்.

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X