பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குடிமராமத்துக்கு ரூ.500 கோடி மட்டுமே போதாது
மக்கள் களமிறங்கினால் தான் வெற்றி கிடைக்கும்

ஏரிகள் மற்றும் பாசன கால்வாய்களை புனரமைக்கும், குடிமராமத்து திட்டத்தை விரைவுப்படுத்தவும், முறைப்படுத்தவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர், நீரியல் வல்லுனர்கள். வடகிழக்குப் பருவமழை, அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கும்; அதற்குள் இந்தப் பணிகளைச் செய்து முடிக்க வேண்டும் என்றும், அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

குடிமராமத்து, மக்கள்,களமிறங்கினால்,தான்,வெற்றி,கிடைக்கும்பொதுப்பணித் துறையின் கீழ் இயங்கும் நீர் வளத்துறையின் பராமரிப்பில், மாநிலம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன.

பராமரிப்பு இல்லை
இவற்றை புனரமைக்க, மத்திய, மாநில அரசுகள் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்த நிதியை பயன்படுத்தி, ஏரிகளை, பொதுப்பணித் துறையினர் முறையாக பராமரிப்பது இல்லை.இதனால், பல ஏரிகள், ஆக்கிரமிப்புகளில் சிக்கி சீரழிந்து வருகின்றன. பல ஏரிகளில், முறையாக நீரை சேமித்து, பாசனம் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்த முடியவில்லை.

சந்திரசேகர ராவ், முதல்வராக உள்ள தெலுங்கானா மாநிலத்தில், 'நபார்டு' வங்கி நிதியுதவியுடன், ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டு உள்ளது.விவசாயிகள், பொது மக்கள் பங்களிப்புடன், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதே திட்டத்தை, 2017 முதல், தமிழக அரசு நடைமுறைப்படுத்த துவங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 1,500 ஏரிகள் வரை, இத்திட்டத்தின் வாயிலாக, புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு கடனுதவி வழங்க, நபார்டு வங்கியும் ஒப்புதல் வழங்கியுள்ளது.அதன்படி, 2017ல், இந்த திட்டத்திற்கு, 100 கோடி ரூபாயும், 2018ல், 329 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இதில், 2018ல் ஒதுக்கிய நிதியில், தற்போது வரை, பல பணிகள் நடக்கவில்லை. நடப்பாண்டில், இத்திட்டத்திற்கு, 500 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களுக்கு, இத்திட்டத்தின் கீழ், முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

வல்லுனர்கள் வலியுறுத்தல்
ஆளும் கட்சி ஒப்பந்ததாரர் வாயிலாக, பணிகளை செய்யாமல், விவசாயிகள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் பங்களிப்புடன், பணிகளை விரைவுப்படுத்தவும், முறைப்படுத்தவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீரியல் வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
எஸ்.திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை அதிகாரி:
தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், குடிமராமத்து திட்டம் இருந்தது. பெரிய பணிகளை, அரசும், சிறிய பணிகளை பாசனதாரர்களும், பொது மக்களும் செய்தனர்.இந்த நடைமுறையை, சுதந்திரத்திற்குப் பின், நாமும் பின்பற்றி வருகிறோம். இதற்காக, ஒவ்வொரு நீர்நிலைகளுக்கும், பாசனதாரர்கள் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த சங்கத்திற்கு, மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு முறை தேர்தல் நடத்தி, நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த தேர்தலை நடத்த வேண்டியது, அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் கடமை.கடந்த ஆறு ஆண்டுகளாக, பாசனதாரர்கள் சங்கத்திற்கு, தேர்தல் நடத்தப்படவில்லை.இதனால், ஆளும் கட்சியினரை வைத்து, பாசனதாரர்கள் சங்கத்தை, திடீரென உருவாக்கி, இரண்டு ஆண்டுகளாக, குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பணிகள் முறையாக நடக்கவில்லை.

புதுப்பொலிவு
தற்போது, ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதற்கு, தகுதியுள்ள பாசனதாரர்கள் சங்கத்தை, உடனடியாக அமைக்க வேண்டும். முடியாதபட்சத்தில், பழைய பாசனதாரர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்களை இணைத்து, இப்பணிகளை உடனடியாக துவங்க வேண்டும்.ஆளும் கட்சியினரிடம் ஒப்பந்தம் கொடுத்து, பணிகளை மேற்கொண்டால், அது, சிறப்பானதாக இருக்காது. அரசு ஒதுக்கும் பணத்தை சுருட்டுவதற்கே, இது வழி ஏற்படுத்தும். அரசு, இந்த திட்டத்திற்கு ஒதுக்கும் நிதியில், 30 சதவீதம் கூட செலவாவது கிடையாது. நிதியை முழுமையாக செலவிட்டால், ஏரிகள் மீண்டும் புதுப்பொலிவுபெறும்.

எஸ்.ஜனகராஜன், தலைவர்,தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம்:
இந்த திட்டத்திற்கு குடிமராமத்து என்று, அரசு கூறுவதே தவறானது. ஒப்பந்ததாரரை வைத்து செய்யும் பணியை, இப்படி அழைக்கக் கூடாது. விவசாயிகள், பொது மக்களை ஊக்குவித்து, அரசு செய்யும் பணிக்கு தான், குடிமராமத்து திட்டம் என்று பெயர்

.ஒரு ஏரியை புனரமைப்பதற்கு முன், பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

Advertisement

முதலில், நீர்பிடிப்பு பகுதிகளையும், நீர்வரத்து கால்வாய்களையும் ஆய்வு செய்ய வேண்டும்பின், ஏரியின் ஏதுவாய் மற்றும்நீர்த்தேக்க பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும். அங்கு, எவ்வளவு மண் அள்ளி துார்வார வேண்டும் என்பதை, கண்டறிய வேண்டும்.


பலனில்லை

வண்டல் மண்ணை தவிர, மற்ற தளர்வான மண் இருந்தால், அந்த பகுதியில் துார்வாருவதை நிறுத்த வேண்டும். இவற்றை செய்யாமல், ஒப்பந்ததாரரை நியமித்து, பணிகளை செய்வதால், இத்திட்டத்தின் பலன் கிடைப்பதில்லை.ஒப்பந்ததாரருக்கு அரசு கொடுக்கும் நிதி மட்டுமின்றி, மண்ணை அள்ளி விற்பனை செய்வதால், லாபமும் இரட்டிப்பாக கிடைக்கிறது.


ஒப்பந்த பணி கிடைத்தவுடன், ஏரியில் மண்ணை அள்ளி விற்பனை செய்துவிட்டு, பின், மணலை துாவி சமன் செய்வதையே, ஒப்பந்ததாரர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, நடப்பாண்டில் ஒதுக்கிய நிதியை, முறையாகச் செலவிட வேண்டும். துார்வாரும் பணியில் ஆர்வமாக உள்ள இளைஞர்கள், பொது மக்கள், விவசாயிகளை பயன்படுத்தி, இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆலோசனை

பருவ மழை துவங்க, குறுகிய கால அவகாசமே இருப்பதால், இதற்கு, அரசு தாமதம் செய்யக் கூடாது. போர்க்கால அடிப்படையில், சிறப்பு அதிகாரிகளை நியமித்து, குழுக்களை அமைத்து, ஏரிகளை புனரமைக்க வேண்டும். பொதுப்பணித் துறையினர், தகுந்த ஆலோசனைகளை வழங்கினால் போதுமானது.துார்வாரிய பின், அப்படியே விட்டுவிடக் கூடாது. ஒவ்வொரு ஆண்டும், தொடர்ச்சியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு, தனியாக பராமரிப்பு நிதியை ஒதுக்கி, இக்குழுவிற்கு, அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
20-ஜூன்-201920:27:01 IST Report Abuse

Girijaதுட்டுக்கு ஆசைப்படாமல் ஓட்டுக்கேட்டு வந்தவனையெல்லாம் இப்படி தூர் வாரவிட்டு இருந்தால் நீங்கள் எல்லோரும் இப்போது கால் மேல் கால் போட்டு ஹாயாக இருந்திருக்கலாம்.

Rate this:
Naren - Chennai,இந்தியா
20-ஜூன்-201913:30:44 IST Report Abuse

Narenதமிழக அரசு மழையை எதிர்பார்த்து தாமதம் செய்வதாக தெரிகிறது... இப்பொழுது செய்யும் நீர் நிலைகளின் பராமரிப்பு அடுத்த சில வருடங்களுக்கு பயன் விளைவிக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும்... இவற்றை அலட்சியம் செய்யாமல் பொதுப்பணித்துறையை முடுக்கி விடவும்... போதிய கால அவகாசம் இல்லை என்பதால் சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர் மாவட்ட ஆட்சியரை நேரடியாக அணுகுவது சாலச் சிறந்தது....

Rate this:
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201912:02:22 IST Report Abuse

Sriram VHope government takes it up quickly, do it with people involvement. Corruption must be stopped. Sack the government officials and politicians

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X