பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தண்ணீர் தட்டுப்பாட்டை போல்
மின் தடை பிரச்னையும் விஸ்வரூபம்

தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாட்டை போல், மின் தடை பிரச்னையும் விஸ்வரூபம் எடுத்து வருவதால், பொது மக்கள், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 தண்ணீர்,தட்டுப்பாட்டை,போல்,மின் தடை, பிரச்னையும் விஸ்வரூபம்



தமிழகத்தில், தினமும் சராசரியாக, 14 ஆயிரம் மெகா வாட் என்ற அளவில் உள்ள, மின் தேவை, கோடைக்காலம் தொடர்வதால், 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியுள்ளது. குறிப்பாக, ஏப்ரல், 3ல், மின் தேவை, முதல் முறையாக, 16 ஆயிரத்து, 151 மெகா வாட்டாக

அதிகரித்து, சாதனை படைத்தது.அதே அளவுக்கு, மின் உற்பத்தி, கொள்முதல் இருந்ததால், மின் பற்றாக்குறை ஏற்படவில்லை.



மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவு,மின்சாரம் கிடைத்தும், மின் சாதன பழுதால், மின் தடை ஏற்படுவது, தொடர் கதையாகிறது.தற்போது, பல மாவட்டங்களில், தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனால், மக்கள் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல், காலி குடங்களுடன், போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், சென்னை உள்ளிட்ட பல இடங்களில், இரவு, 10:00 மணிக்கு மேல், அடிக்கடி மின் தடை ஏற்பட்டுவருகிறது.



ஏற்கனவே, தண்ணீர் தட்டுப்பாட்டால், மக்கள் பரிதவிக்கும் நிலையில், மின் தடை பிரச்னையும் விஸ்வரூபம் எடுத்து வருவதால், அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து, மின்

Advertisement

வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோடை முடிந்தும், வெயில் கடுமையாக வீசுகிறது. வீடுகளில், விடிய விடிய, 'ஏசி' பயன்பாடு உள்ளது. இதனால், மின் சாதனங்களில் பழுது ஏற்படுவதால், மின் தடை ஏற்படுகிறது. இருப்பினும், உடனே மின் சப்ளை வழங்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-ஜூன்-201921:24:52 IST Report Abuse

Natarajan Ramanathanதிராவிஷம் அழிக்கப்படும்வரை தமிழகம் உருப்படாது. தீயமுக தடைசெய்யப்பட வேண்டிய உலகமகா ஊழல் கட்சி.

Rate this:
Girija - Chennai,இந்தியா
20-ஜூன்-201920:28:42 IST Report Abuse

Girijaமுக்கிய அறிவிப்பு - போர்க்கால அடிப்படையில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பவர் பேங்க் உடனே வழங்கப்படும்,

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
20-ஜூன்-201912:10:45 IST Report Abuse

தமிழ் மைந்தன்கருணாநிதியை பாதித்ததால் நிலத்தடி நீர் வற்றியது .....அவரின் சமாதியில் விளக்கு போட்டதால் மின்சாரம் கூட வரமாட்டேங்கிறதே........

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-ஜூன்-201912:21:56 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இப்படி சொல்லியே வெந்து சாவு. மணல் கொள்ளையனும், ஹைவேஸ் கொள்ளையனும் ஒனக்கு மாலை போட வருவாங்க.. ...

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X