ராமதாஸ் அத்வாலே பேச்சு: குலுங்கி சிரித்த மோடி, ராகுல்

Updated : ஜூன் 20, 2019 | Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (15)
Advertisement
 ராமதாஸ் அத்வாலே பேச்சு: குலுங்கி சிரித்த மோடி, ராகுல்

புதுடில்லி: லோக்சபாவின் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை வாழ்த்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

மகாராஷ்டிராவின் இந்தியக் குடியரசு கட்சி தலைவரான ராம்தாஸ் அத்வாலே, சமூக நீதி துறை இணை அமைச்சராக உள்ளார்.இவர் பேசுகையில், ''எதிர்க்கட்சி வரிசையிலேயே தொடர்ந்து அமர வாய்ப்பு பெற்ற ராகுலுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். லோக்சபா தேர்தலுக்கு முன் காங்., பக்கம் சேரும்படி எனக்கு அழைப்பு விடுத்தனர்.ஆனால், மோடி பக்கம் பலமான காற்று வீசியதை உணர்ந்ததால், பா.ஜ., கூட்டணியிலேயே நீடித்தேன். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடியின் நலப்பணிகள் தொடரும்,''என்றார்.மோடியின் வெற்றி, காங்., தோல்வியை நகைச்சுவை உணர்வோடு ராம்தாஸ் அத்வாலே பேசியதால், பிரதமர் மோடி, காங்., தலைவர் ராகுல், சோனியா உள்ளிட்ட அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.





Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
23-ஜூன்-201905:50:22 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நகைசுவை உணர்வுகளுக்குமா சாதி என்னாய்யா சிரிக்கத்தெரிஞ்ச ஒரே உயிரினம் மனித இனம் தான் , தானாவே வரணும் யாரும் கற்றுத்தரவேண்டாம் ஸ்பான்டேனியஸ் ஜோக்ஸ் சொல்ல சிலராள்மட்டும்தான் முடியும் லைக் சோ முக ராஜாஜி கிரேஸி நாகேஷ் கலைவாணர் தமிழ்நாட்டுலே என்றால் வடக்கே கிருபளானி பிஜு படநாயக் போல பலர் உண்டு , சிரிக்கவே தெரியாதவர் என்று சொல்லப்படும் மமதை ஜீயும் ரொம்பவே நாகஉச்சுவை யுடன் பேசுவார் (ஆனால் சர்காஸ்டிக்காக இருக்கும் )
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-ஜூன்-201916:50:31 IST Report Abuse
இந்தியன் kumar அனைவரையும் சிரிக்க வைக்கவும் ஒரு திறமை வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Murukesh - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201912:19:07 IST Report Abuse
Murukesh இவர் ரொம்ப வெளிப்படையாக சொல்லி விட்டார். அடுத்த 5 வருடம் கழித்து இருக்கும் சூழ்நிலையை பொறுத்து பிஜேபி / காங்கிரஸ் முடிவு செய்வேன் என்று. பெரும்பாலான அரசியல் பச்சோந்திகள் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X