பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துறை வாகனங்கள் இயக்கம் சுற்றுலா மேம்பட வாய்ப்பு

Added : ஜூன் 20, 2019
Advertisement

ஊட்டி, : ஊட்டி அவலாஞ்சி சூழல் சுற்றுலாவுக்காக, வனத்துறை சார்பில், இரண்டு வாகனங்களை இயக்கி வருவது, சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.ஊட்டி அவலாஞ்சி பகுதி இயற்கை சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு, வனத்துறை மற்றும் தோடரின மக்களால், சூழல் சுற்றுலா உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், மாவட்டத்தின் இயற்கை வளம், நீலகிரியில் வாழும் ஆதிவாசி மக்களின் வாழ்வியல் முறை உள்ளிட்ட தகவல்களை தெரிந்துக் கொள்வதுடன், இயற்கை காட்சிகளை கண்டு களிக்க முடியும்.

இதனால் கோடை விழா நாட்கள் உட்பட சாதாரண நாட்களில் கூட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, இதுவரை தனியார் ஜீப்புகள் இப்பகுதிக்கு இயக்கப்பட்டு வந்தது. நாளுக்கு நாள் பார்வையாளர்களின் கூட்டம் அதிகரிக்கவே, வனத்துறை சார்பில் தற்போது, இரண்டு மஸ்தா வாகனங்கள் அவலாஞ்சி பகுதிக்கு இயக்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையை பொறுத்து, தேவைப்படும் பட்சத்தில், கூடுதலாக வாகனங்களை இயக்கவும் வனத்துறை முடிவெடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X