ஆற்றில் படகு கவிழ்ந்து 17 பேர் பலி| Dinamalar

ஆற்றில் படகு கவிழ்ந்து 17 பேர் பலி

Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (1)

ஜகர்தா, இந்தோனேசியாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 17 பேர் பலியாகினர்.இந்தோனேசியாவில் திருமண கோஷ்டியினர் ஜாவா தீவிலிருந்து ஒரு படகில் மதுரா தீவிற்கு புறப்பட்டனர். படகில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். அந்த படகு நேற்று சுமனெப் தீவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது படகு உடைந்து ஆற்றில் மூழ்கியது. இதில் படகில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கினர். பேரிடர் மேலாண்மை குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இதில் 17 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். 39 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X