சிக்கினார் சிறை வார்டன்ரூ.46 லட்சம் கொள்ளை

Added : ஜூன் 20, 2019
Share
Advertisement
தர்மபுரி, பொம்மிடி தனியார் நிதி நிறுவனத்தில், 46 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில், சேலம் சிறை வார்டன் உட்பட, மூன்று பேரை பிடித்து, தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், பொம்மிடியில், 'எல் அண்டு டி பைனான்ஷியல் சர்வீசஸ்' என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மே, 6 இரவில், இந்த நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு, லாக்கருடன், 46 லட்சம்

தர்மபுரி, பொம்மிடி தனியார் நிதி நிறுவனத்தில், 46 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில், சேலம் சிறை வார்டன் உட்பட, மூன்று பேரை பிடித்து, தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், பொம்மிடியில், 'எல் அண்டு டி பைனான்ஷியல் சர்வீசஸ்' என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மே, 6 இரவில், இந்த நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு, லாக்கருடன், 46 லட்சம் ரூபாய் கொள்ளை போனது.குற்றவாளிகளை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் விசாரித்து, சேலம், மத்திய சிறையில் வார்டனாக பணிபுரியும், தர்மபுரி சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த பெருமாள், 27, கொள்ளை நடந்த நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த செந்தில், 25, கார் டிரைவர் இளவரசன், 27, ஆகியோரை, சில நாட்களுக்கு முன், பிடித்து விசாரித்தனர்.இதில், மூவருக்கும் கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிந்தது. மேலும், சேலம் மத்திய சிறையில் உள்ள கொள்ளையன் சரவணன் என்பவனும் உடந்தை என்பது தெரிந்தது.பிடிபட்ட மூவரிடம் இருந்தும், 7 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர். 'மீதமுள்ள பணம் குறித்து, சிறையில் உள்ள சரவணனை காவலில் எடுத்து விசாரித்தால் தான் தெரியும்' என, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X