பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இன்ஜி., கவுன்சிலிங் தரவரிசை

Updated : ஜூன் 20, 2019 | Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை: தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.72 லட்சம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இன்று(ஜூன் 20) தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.






அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக உயர் கல்வி துறையின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. மொத்தம், 1.33 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில், 1.04 லட்சம் பேர் மட்டும், அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்பட உள்ளது.





மாணவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில், ஒட்டுமொத்த தரவரிசையும், ஜாதி வாரி தர வரிசையும், இந்த பட்டியலில் இடம்பெறும். கவுன்சிலிங் நடவடிக்கைகள், வரும், 25ம் தேதி துவங்குகின்றன. பொது பாட பிரிவு மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கவுன்சிலிங், ஜூலை, 3 முதல், 30 வரை, 'ஆன்லைன்' வழியே நடத்தப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
20-ஜூன்-201911:22:02 IST Report Abuse
தமிழ் மைந்தன் தமிழகத்தில் உள்ள 476 கல்லூரியில் சுமார் 300 க்கு மேல் ஊழல்திமுக கம்பெனி மற்றும் கம்பெனி அடிமைகளுடையது..... இதில் படிக்கும் மாணவர்களுக்கு எங்கே தரம் இருக்கும்........கொலை,கொள்ளை மற்றும் பாலியல் வழக்குகளில் உள்ள குற்றவாளிகள் அனைவரும் இங்கே பயின்றவர்கள்........
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஜூன்-201910:21:16 IST Report Abuse
Pugazh V இந்த வருடம் எத்தனை காலேஜ்கள், மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் ஊத்தி மூடப் போகிறதோ?
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
20-ஜூன்-201909:49:25 IST Report Abuse
GMM 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து ஆசிரியர் கல்வி தரவரிசை வெளியிடலாம். கல்லூரிகள் தரவரிசை கேம்பஸ் தேர்வு /வேலை வாய்ப்பு அடிப்படையில். தரம் குறைந்த கல்லூரிகளை பாலிடெக்னிக்/ITI ஆக மாற்றுதல். கல்லூரியில் படித்த மாணவர்கள் ஆண்டுக்கு 10 சதம் வேலையில் சேரவில்லை எனில், கல்லூரியை மூடுதல். Sed labour களை உருவாக்கி கொள்ள அனுமதிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X